கிசு கிசு
நான் செய்த குறும்பு! பாதியில் நின்று போன மஹாவிஷ்ணுவின் திரைப்படம்! இது எத்தனை பேருக்கு தெரியும்?

நான் செய்த குறும்பு! பாதியில் நின்று போன மஹாவிஷ்ணுவின் திரைப்படம்! இது எத்தனை பேருக்கு தெரியும்?
சோசியல் மீடியாக்களில் சமீபகாலமாக பல விடையங்கள் பேசப்பட்டு வந்தாலும் ஆன்மிக பேச்சாளர் ஆன மகா விஷ்ணு பேசியது தற்போது பரபரப்பாகி வருகிறது. அசோக் நகர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியின்போது வெளியிட்ட சில கருத்துக்களாக கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.அவர் சமீபத்தில் ஒரு படத்தை இயக்கினார் என்பது பலரும் அறிந்திடாத ஒன்று ‘நான் செய்த குறும்பு’ என்ற படத்தை எடுக்கப் பூஜை போட்டு, படப்பிடிப்பைத் தொடங்கினார் ‘கயல்’ சந்திரன், அஞ்சு குரியன் நடிப்பதாக அறிவித்தார். சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் படம் டிராப் ஆனது. படத்தின் கதையும் வில்லங்கமானது ஒரு ஆண் கர்ப்பமானால் எப்படி இருக்கும் என்பதை தான் கதை. இனி இது தொடருமா அல்லது அப்படியே நின்றுவிடுமா என்பது படக்குழுவினரது கேள்வியாக இருக்கிறது.