இலங்கை
படுகொலை செய்யப்பட்ட செஞ்சோலை வளாகத்தில் மாணவர்களுக்கு உணர்வுபூர்வ அஞ்சலி இன்று!

படுகொலை செய்யப்பட்ட செஞ்சோலை வளாகத்தில் மாணவர்களுக்கு உணர்வுபூர்வ அஞ்சலி இன்று!
சிறிலங்கா இராணுவத்தின் விமானப்படையினரின் மிலேச்சத்தனமான வான் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கான அஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஒன்று இன்று(14) செஞ்சோலை வளாகத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது .
முல்லைத்தீவு – வள்ளிபுனம்- இடைக்கட்டில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு 8.14 ஆம் திகதியன்றுதலைமைத்துவ பயிற்சிக்காக சென்றிருந்த மாணவர்கள் மீது இலங்கை விமானப்படை நடத்திய மிலேச்சத்தனமான தாக்குதலில் பாடசாலை மாணவர்கள் 53 பேர் உட்ப்பட 61 பேர் உயிரிழந்தனர். இவர்களது 18ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தாக்குதல் இடம்பெற்ற இடத்தில் விமானத்தாக்குதல் இடம்பெற்ற நேரத்தில் இன்று (14) காலை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த உறவுகளுக்கு ஈகச்சுடரேற்றி அக வணக்கம் செலுத்தி மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. குறித்த அஞ்சலி நிகழ்வில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன்,முன்னாள் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உறுப்பினர் சி.குகநேசன் மற்றும் சமூக செயற்ப்பாட்டாளர்கள்இ இளைஞர்கள், பொதுமக்கள், சமூக என பலரும் கலந்து கொண்டு உணர்வுபூர்வமாக அஞ்சலியினை செலுத்தியிருந்தனர். (ஞ)