டி.வி
பிக்பாஸ் சீசன் 8 : பட்டைப்பெயர் வைத்த போட்டியாளர்கள்..செளந்தர்யாவுக்கு என்ன பெயர் தெரியுமா?

பிக்பாஸ் சீசன் 8 : பட்டைப்பெயர் வைத்த போட்டியாளர்கள்..செளந்தர்யாவுக்கு என்ன பெயர் தெரியுமா?
பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தற்போது 30 நாட்களை கடந்து ஒளிப்பரப்பாகி வருகிறது. விஜய் சேதுபதி சிறப்பாக தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 8ல் இந்த வாரம் சத்யா கேப்டனாக இருந்து வருகிறார்.இந்தவாரம் கடந்து வந்த பாதை என்ற டாஸ்க் நடைபெற்று வரும் நிலையில் கேப்டன் சத்யா, தன்னுடைய வாழ்க்கையில் நடந்த முதல் காதல் கைக்கூடாம போனது பற்றி மனம்விட்டு பேசியது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.இந்நிலையில் போட்டியாளர்கள் ஒவ்வொருத்தவருக்கும் மற்றவர்கள் மாறிமாறி பட்டப்பெயர் வைத்துள்ளனர்.அதில் கருத்து கந்தசாமி என்று முத்துக்குமரனுக்கும், ஆர்வக்கோளாறு சாச்சனாவிற்கும், மூட்டைப்பூச்சி செளந்தர்யாவுக்கும் வைத்துள்ளனர்.