Connect with us

கிசு கிசு

புது பிரச்சினையுடன் வந்த சனம்! ஆன்லைன் மோசடி கும்பல்! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Published

on

Loading

புது பிரச்சினையுடன் வந்த சனம்! ஆன்லைன் மோசடி கும்பல்! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

நடிகை சனம் ஷெட்டி இன்று காலையில் தனக்கு நேர்ந்த ஒரு அதிர்ச்சி அனுபவத்தை வீடியோவாக வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.ஆன்லைன் மூலம் மோசடி செய்யும் கும்பல் அதிகரித்துள்ள நிலையில் தனக்கு இன்று காலை ஒரு போன் கால் வந்ததாகவும், அதில் உங்கள் நம்பரில் இருந்து ஏகப்பட்ட பாலியல் மிரட்டல்கள் வந்துள்ளது என்றும், 25க்கும் அதிகமான புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே நீங்கள் கைதாகவும் வாய்ப்பு இருப்பதாக மிரட்டினார்கள்.அப்போது நானே சற்று பயந்து என்ன விஷயம் என்று கேட்டபோது, உங்கள் போன் நம்பருக்கு ஏகப்பட்ட புகார் வந்துள்ளது, உங்களுடைய முழு தகவல்களை உடனடியாக எனக்கு தெரிவிக்காவிட்டால் உங்கள் சிம் முடக்கப்பட்டு விடும் என்று கூறினார்கள். அப்போதுதான் எனக்கு நாம் சிம் வாங்கும்போதே நம்முடைய ஆதார் கார்டு உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் தொலை தொடர்பு நிறுவனத்திற்கு கொடுத்துள்ளோம், அப்படி இருக்கும்போது எதற்காக ஆதார் கார்டு உள்ளிட்ட விவரங்களை கேட்கிறார்கள் என்ற சந்தேகம் தனக்கு ஏற்பட்டு போனை கட் செய்து விட்டதாக கூறினார்.இதேபோன்று தனக்கு தெரிந்த ஒருவருக்கு ஒரு கால் வந்ததாகவும், அவர்கள் அனுப்பிய லிங்கை கிளிக் செய்ததால் அவருடைய போன் ஹேக் செய்யப்பட்டதாகவும் கூறிய சனம் ஷெட்டி இதுபோன்ற மிரட்டல் கால் வந்தால் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் எந்த ஒரு லிங்கையும் தயவு செய்து கிளிக் செய்து விடாதீர்கள் என்றும் அப்படி கிளிக் செய்துவிட்டால் நம்முடைய போன் ஹேக் செய்யப்பட்டுவிடும், பேங்க் தகவல் எல்லாம் மோசடி நபருக்கு தெரிந்து விடும் என்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன