Connect with us

சினிமா

பெயருடன் ரிலீசாகிறது SK23 பர்ஸ்ட் லுக்! அடுத்த வேட்டைக்கு தயாராகும் சிவகார்த்திகேயன்!

Published

on

Loading

பெயருடன் ரிலீசாகிறது SK23 பர்ஸ்ட் லுக்! அடுத்த வேட்டைக்கு தயாராகும் சிவகார்த்திகேயன்!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் அமரன். இந்த திரைப்படம் தற்போது வசூலில் கொடிக்கட்டி பறக்கிறது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக ‘எஸ்.கே.23’ என்று பெயரிடப்பட்டுள்ளது.முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 2020-ம் ஆண்டு வெளியான படம் ‘தர்பார்’. இப்படத்துக்குப் பிறகு 3 வருடங்களாக படங்களை இயக்காமல் இருந்த முருகதாஸ் தற்போது நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து புதிய படத்தை தொடங்கியுள்ளார். இப்படத்தில் கன்னட நடிகை ருக்மணி வசந்த் நாயகியாக நடிக்கிறார். இதன் மூலம் தமிழ் சினிமாவில் முதல் முறையாக அறிமுகமாகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் பூஜையுடன் தொடங்கியது. 90 சதவீதம் படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் ஆகியவை வருகின்ற 2025-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி வெளியாகஇருக்கிறது. 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன