இந்தியா
மகாராஷ்டிரா முதல்வர் பதவியை ராஜினாமா செய்த ஏக்நாத் ஷிண்டே.. இடைக்கால முதல்வராக இருப்பார் என்று அறிவிப்பு!

மகாராஷ்டிரா முதல்வர் பதவியை ராஜினாமா செய்த ஏக்நாத் ஷிண்டே.. இடைக்கால முதல்வராக இருப்பார் என்று அறிவிப்பு!
மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தனது பதவியை ராஜினாமா செய்தார். புதிய அரசு அமையும் வரை காபந்து முதலமைச்சராக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மகாராஷ்டிராவில் மகாயுதி கூட்டணி ஆட்சியை தக்க வைத்த நிலையில், புதிய முதலமைச்சரை தேர்வு செய்வதில் இழுபறி நீடித்து வருகிறது. ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சர் பதவியில் நீடிக்க வேண்டும் என்று சிவசேனா கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தனது ராஜினாமா கடிதத்தை மும்பையில் ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ராதாகிருஷ்ணனிடம் சமர்ப்பித்தார்.
Also Read:
ரிசர்வ் வங்கி ஆளுநர் உடல் நலம் எப்படி இருக்கிறது..? அப்போலோ அறிக்கை வெளியீடு..!
அப்போது துணை முதலமைச்சர்கள் தேவேந்திர பட்னாவிஸ், அஜித் பவார் ஆகியோர் உடன் இருந்தனர். இதையடுத்து ஏக்நாத் ஷிண்டேவின் ராஜினாமா கடிதத்தை ஆளுநர் ஏற்றுக் கொண்டார். அதேநேரம் புதிய அரசு பதவியேற்கும் வரை முதலமைச்சர் பதவியில் தொடரும்படி ஏக்நாத் ஷிண்டேவிடம் கேட்டுக் கொண்டார். மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், மகாயுதி கூட்டணியின் புதிய முதலமைச்சர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.