இலங்கை
மாங்குளத்தில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

மாங்குளத்தில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!
மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனிச்சங்குளம் பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாங்குளம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கைதான சந்தேகநபர் கிளிநொச்சியை சேர்ந்த 26வயதுடையவராவார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (ச)