டி.வி
முதல் காதலியின் மரணம்..5 முறை தற்கொலை முயற்சி..போதைக்கு அடிமையாகிய பிக்பாஸ் 8 சத்யாவின் மறுப்பக்கம்..

முதல் காதலியின் மரணம்..5 முறை தற்கொலை முயற்சி..போதைக்கு அடிமையாகிய பிக்பாஸ் 8 சத்யாவின் மறுப்பக்கம்..
பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தற்போது 30 நாட்களை கடந்து ஒளிப்பரப்பாகி வருகிறது. விஜய் சேதுபதி சிறப்பாக தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 8ல் இந்த வாரம் சத்யா கேப்டனாக இருந்து வருகிறார். இந்தவாரம் கடந்து வந்த பாதை என்ற டாஸ்க் நடைபெற்று வரும் நிலையில் கேப்டன் சத்யா, தன்னுடைய வாழ்க்கையில் நடந்த முதல் காதல் கைக்கூடாம போனது பற்றி மனம்விட்டு பேசியிருக்கிறார்.அவரின் பேச்சைக் கேட்டு சக போட்டியாளர்களும் கண்கலங்கியுள்ளனர். நான் ஒரு நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்து 5ஆம் வகுப்பு படிக்கும்போது என் பெற்றோர் என்னை பிரிந்து சென்றுவிட்டனர். இதனால் அப்பத்தா வீட்டில்தான் வளர்ந்தேன்.ஒருக்கட்டத்தில் அப்பத்தாவுக்கும் வயசானதால் அவரால் எனை கவனித்துக்கொள்ள முடியாமல் போக போர்டிங் ஸ்கூலில் என்னை சேர்த்துவிட்டனர். அங்கு ஒரு பெண் மீது காதலில் விழுந்தேன். அந்த காதல் ஸ்கூல் முடித்து காலேஜ் படிக்கும்போதும் தொடர்ந்தது.அந்த காதல் விவகாரம் அந்தப்பெண்ணின் வீட்டுக்கு தெரிந்ததும் அவரைவிட்டு அனுப்பிவிட்டார்கள். நல்லபடியாக காதல் வாழ்க்கை சென்று கொண்டிருந்தபோது திடீரென ஒருபோன் கால் வந்தது.அவள் இறந்துவிட்டால் என்று அந்தபோன் காலில் என்னிடம் அனுமதி வாங்கிவிட்டுதான் ஒரு இடத்திற்கு சென்றால். அங்கு சிலர் சேர்ந்து அவளை கற்பழித்துவிட்டார்கள். ரேப் செய்து அவளை அப்யூஸ் செய்து ஒரு ரயில் டிராக்கில் தூக்கிப்போட்டுட்டார்கள்.அந்த பிரிதலை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாமல் நான் 5 முறை தற்கொலைக்கு முயன்றிருக்கிறேன். அது என் கோழைத்தனம்தான். நான் உயிருக்கு உயிராக காதலித்த பெண் என்னைவிட்டு போயிட்டு என் பெற்றோரும் என்னைவிட்டு போய்விட்டார்கள் என்ற கவலையில் தான் அதை செய்தேன்.பின் நான் போதைக்கு அடிமையாகி, பின் சினிமா கேரியர்தான் என்னை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றியது. என் முதல் காதலியை மறக்க கூடாது என்பதற்காக கையில் இந்த ஹார்ட் பீட் டாட்டுவை போட்டிருக்கிறேன்.சினிமாவுக்கு உள்ளே வந்தப்பின் எனக்கு இன்னொரு காதல் வந்தது, அதுதான் என் மனைவி ரம்யா. இந்த கதையில் இருந்து நான் சொல்வது என்ன என்றால், ஒரு பெற்றோராக ஈஸியாக சண்டைப்போட்டு பிரிந்துவிடலாம்.அதன்பின் அந்த குழந்தையோட மனநிலையை பற்றி யோசித்து இந்த முடிவை எடுக்க வேண்டும் என்று ஃபீல் பண்ணுகிறேன் என்ற மெசேஜை சத்யா கூறி முடித்ததும் அங்கிருந்த சக போட்டியாளர்கள் உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கியிருக்கிறார்கள்.