Connect with us

சினிமா

விவரிக்க முடியாத உறவு..என் வழிகாட்டி அவர் தான்!! உருகிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..

Published

on

Loading

விவரிக்க முடியாத உறவு..என் வழிகாட்டி அவர் தான்!! உருகிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகளாக நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். 18 ஆண்டு திருமண வாழ்க்கையில் இரு மகன்கள் வளர்ந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் பிரிந்து வாழ்வதாக அறிக்கை வெளியிட்டார்கள் தனுஷ் – ஐஸ்வர்யா. இதனை அடுத்து சட்டரீதியாக தனுஷ் நீதிமன்றத்தில் விவாகரத்து மனு அளித்திருந்தார்.பின் மூன்று முறை நீதிமன்றத்தில் விசாரணை நடந்தபோது தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் ஆஜராகவில்லை. கடந்த வாரம் வழக்கு விசாரணைக்கு வந்தபோது இருவரும் ஆஜராகி, விவாகரத்து வேண்டும் என்று நீதிபதியிடம் கூறியிருக்கிறார்கள். இதன்பின், இருவரும் விவாரகத்து வேண்டுமென்பதில் உறுதியாக இருப்பதால் நவம்பர் 27 ஆம் தேதி வழக்கை ஒத்தி வைத்தனர். நாளை விவாகரத்து வழக்கின் தீர்ப்பு வரவிருக்கும் நிலையில், கனிமொழி குறித்து ஐஸ்வர்யா சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார்.அதில், எனக்கும் கனிமொழிக்கும் இருக்கும் நட்பு என்பது 20 ஆண்டுகளாக நட்பு. எங்களுக்கிடையில் இருக்கும் உறவு மிகவும் ஆழமானது, எங்கு தொடங்கினோம், எப்படி பழகினோம் என்பதை விவரிக்க முடியாத ஒரு உறவு. நான் எப்போதெல்லாம் சோகமாக இருக்கிறேனோ அப்போதெல்லாம் கனிமொழிக்கு தான் போன் செய்து பேசுவேன்.இரண்டு பேரும் குடும்ப உறுப்பினர்கள் போன்று தான் பேசிக்கொள்வோம். யாருக்காவும் நான் எங்கும் செல்லமாட்டேன். ஆனால் கனிமொழிக்காக எங்கு வேண்டுமானாலும் கிளம்பி செல்வேன். எங்கள் இருவருக்கும் இடையில் இருக்கும் நட்பு குறித்து நாங்கள் எங்குமே சொன்னதில்லை, சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை.அவருக்கு கடவுள் நம்பிக்கை இல்லை, ஆனால் என்னுடைய கோயில் வழிகாட்டி அவர்தான். நான் எந்த ஊருக்கு சென்றாலும் கனிமொழி அனுப்பும் ஆட்கள் தான் அழைத்து செல்வார்கள் என்று ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உருகி பேசியிருக்கிறார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன