இந்தியா
“வெற்றி பெற்றால் சந்தேகம் வராது..” – வாக்குச் சீட்டு முறை கேட்டு தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்

“வெற்றி பெற்றால் சந்தேகம் வராது..” – வாக்குச் சீட்டு முறை கேட்டு தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்
கே.ஏ. பால் என்பவர், தேர்தலில் வாக்குப் பதிவு இயந்திரத்திற்கு பதிலாக வாக்குச் சீட்டு முறையை கொண்டுவர வேண்டும், வாக்குக்கு பணம், மது, பொருள்களை வழங்கும் வேட்பாளர்களை குறைந்தபட்சம் ஐந்து வருடத்திற்கு தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனக் கூறி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம்நாத் மற்றும் வாராலே ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்றது.
அப்போது மனுதாரர் கே.ஏ. பால், “சந்திரபாபு மற்றும் ஜெகன் மோகன் போன்ற தலைவர்களே மின்னணு வாக்கு இயந்திரம் குளறுபடி குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளனர்” என்று தெரிவித்தார்.
இதற்கு நீதிபதிகள், “சந்திரபாபு அல்லது ஜெகன் மோகன் ஆகியோர் தோற்றால் வாக்குப் பதிவு இயந்திரம் குறித்து கேள்வி எழுப்புவார்கள். அதே அவர்கள் வெற்றி பெற்றால் அது குறித்து கேள்வி எழுப்ப மாட்டார்கள்” என்று தெரிவித்தனர்.
தொடர்ந்து மனுதாரர் கே.ஏ.பால், “வாக்காளர்களுக்கு பணம், மது, பொருள் உள்ளிட்டவற்றை வழங்கும் வேட்பாளர்களை குறைந்தது ஐந்து வருடம் தகுதி நீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும்” என்றார்.
இதையும் படியுங்கள் :
“சமூக நீதி குறிப்பிட்ட கட்சிக்கானது கிடையாது” – ஆளுநர் ஆர்.என். ரவி
அதற்கு நீதிபதிகள், “எப்படி இதுபோன்ற சிந்தனைகளை எல்லாம் பெறுகிறீர்கள்” என்று கேள்வி எழுப்பி அந்த மனுவை தள்ளுபடி செய்தனர்.