கிசு கிசு
ஹேமா கமிட்டி குறித்து வெளிப்படையாக பேசிய பிரபல நடிகை நளினி… டி ராஜேந்தர் குறித்து என்ன சொன்னார் தெரியுமா?

ஹேமா கமிட்டி குறித்து வெளிப்படையாக பேசிய பிரபல நடிகை நளினி… டி ராஜேந்தர் குறித்து என்ன சொன்னார் தெரியுமா?
90 காலகட்டத்தில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நளினி. இவர் விஜயகாந்த், சத்யராஜ், மோகன் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் பல வெற்றி படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்தவர். பிசியான நடிகைகளில் ஒருவராக இருந்த நளினி தற்போது நிறைய சீரியல்களில் காமெடி ரோலிலும், முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். இவர் அண்மையில் ஒரு பேட்டியில் ஹேமா கமிட்டி அறிக்கை குறித்த தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அதில், ஒருவர் நம்மிடம் எந்த எண்ணத்தில் பழகுகிறார் என்பதை அவர்கள் கண்களை பார்த்து தெரிந்து கொள்ள முடியும். ஒரு பெண்ணை அவரின் விருப்பம் இல்லாமல் யாராலும் தொட்டுவிட முடியாது. நான் முன்னணி நடிகையாக இருந்த நேரத்தில் இதுபோன்று பெண்களுக்கு எதிராக எந்த செயலும் நடந்தது இல்லை. அதற்கு முக்கிய காரணம் டி ராஜேந்தர் போன்று சிறந்த மனிதர் இருந்தது தான், அவர் மூச்சுக்காற்று கூட நடிகைகளின் மீது படாது என்று கூறியுள்ளார்.