Connect with us

இந்தியா

9 மாதங்களில் ரூ.11,333 கோடி இழப்பு: இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தும் சைபர் மோசடிகள்

Published

on

cyber scams india pm modi Tamil News

Loading

9 மாதங்களில் ரூ.11,333 கோடி இழப்பு: இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தும் சைபர் மோசடிகள்

மத்திய உள்துறை அமைச்சகத்தின் பிரிவான இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் (ஐ4சி) தொகுத்த தரவுகளின்படி, 2024 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இணைய மோசடியால் இந்தியா தோராயமாக ரூ.11,333 கோடியை இழந்துள்ளதாக தெரிவித்துள்ளது. 2,28,094 புகார்கள் பெறப்பட்ட நிலையில், ரூ.4,636 கோடி இழப்புகளுடன் பங்கு வர்த்தக மோசடிகள் முதன்மையானதாக இருக்கிறது. முதலீட்டு அடிப்படையிலான மோசடிகளால் 1,00,360 புகார்களில் இருந்து ரூ.3,216 கோடி இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. அதே சமயம் 63,481 புகார்களில் “டிஜிட்டல் கைது” மோசடிகளால் ரூ.1,616 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.ஆங்கிலத்தில் படிக்கவும்: Rs 11,333 crore lost in just 9 months: A look at the cyber scams that have hit India the worstதி இந்தியன் எக்ஸ்பிரஸ் பகுப்பாய்வு செய்த தரவுகளின் படி, குடிமக்கள் நிதியியல் சைபர் மோசடி அறிக்கை மற்றும் மேலாண்மை அமைப்பின் (CFCFRMS) தரவு, 2024 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 12 லட்சம் இணைய மோசடி புகார்கள் பெறப்பட்டதாகக் காட்டுகிறது. இவற்றில் 45% தென்கிழக்கு ஆசிய நாடுகளான கம்போடியா, மியான்மர் மற்றும் லாவோஸ் 2021 முதல், குடிமக்கள் நிதி இணைய மோசடிகள் அறிக்கை மற்றும் மேலாண்மை அமைப்பு 30.05 லட்சம் புகார்களைப் பதிவு செய்துள்ளது, இதனால் ரூ. 27,914 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில், 2023ல் 11,31,221 புகார்களும், 2022ல் 5,14,741 புகார்களும், 2021ல் 1,35,242 புகார்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் தனது ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியின் 115 வது பதிப்பின் போது “டிஜிட்டல் கைது” மோசடிகள் குறித்து குடிமக்களை எச்சரித்து இருந்தார். விசாரணைக்காக எந்த அரசு நிறுவனமும் தனிநபர்களை தொலைபேசி அல்லது வீடியோ அழைப்புகள் மூலம் தொடர்புகொள்வதில்லை என்பதை வலியுறுத்திய மோடி, பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டார். “சட்டத்தின் கீழ் டிஜிட்டல் கைது போன்ற அமைப்பு எதுவும் இல்லை,” என்று அவர் கூறினார். இதுபோன்ற மோசடிகளை எதிர்த்துப் போராடுவதற்கான விழிப்புணர்வின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.இந்த ஆண்டு சைபர் மோசடிகளின் பகுப்பாய்வு, காசோலைகள், மத்திய வங்கி டிஜிட்டல் நாணயம் (CBDC), ஃபின்டெக் கிரிப்டோ, ஏடிஎம்கள், வணிகர் கொடுப்பனவுகள் மற்றும் இ-வாலட்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி திருடப்பட்ட பணம் பெரும்பாலும் திரும்பப் பெறப்படுகிறது. கடந்த ஆண்டில், ஐ4சி ஆனது சுமார் 4.5 லட்சம் சந்தேகத்திற்கு உள்ளான வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ளது. பொதுவாக சைபர் கிரைம் மூலம் கிடைக்கும் வருமானத்தை இந்த கணக்குகள் மூலம் மாற்றம் செய்யப் பயன்படுகிறது.சமீபத்திய பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டில், டிஜிட்டல் பணப்பையின் பெயர் தெரியாதது, வெளிநாட்டு பணப் பரிமாற்றங்கள், கே.ஒய்.சி நெறிமுறைகள் இல்லாமை, வி.பி.என் அணுகல் மற்றும் வெளிநாட்டிலிருந்து வரும் கிரிப்டோகரன்சி மோசடிகள் உள்ளிட்ட இணைய மோசடி வழக்குகளில் புலனாய்வாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களை ஐ4சி மேற்கோள்கட்டி இருந்தது. மேலும், தொலைத்தொடர்பு அமைச்சகத்துடன் இணைந்து, தென்கிழக்கு ஆசியாவிலிருந்து செயல்படும் சைபர் கிரைமினல்களுடன் இணைக்கப்பட்ட 17,000 வாட்ஸ்அப் கணக்குகளையும் ஐ4சி முடக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன