தொழில்நுட்பம்
Black Friday Sale in India | இந்தியாவில் விரைவில் தொடங்குகிறது பிளாக் ஃப்ரைடே விற்பனை..அதிரடியான ஆஃபர்களை வழங்கும் நிறுவனங்கள்!

Black Friday Sale in India | இந்தியாவில் விரைவில் தொடங்குகிறது பிளாக் ஃப்ரைடே விற்பனை..அதிரடியான ஆஃபர்களை வழங்கும் நிறுவனங்கள்!
கடந்த சில ஆண்டுகளாக பிளாக் ஃப்ரைடே விற்பனை இந்தியாவில் மிகவும் பிரபலமாகி வருகிறது. பிளாக் ஃப்ரைடே ஷாப்பிங்குடன் அமெரிக்காவில் விடுமுறை காலம் தொடங்குகிறது என்றே சொல்லலாம். அமெரிக்கா போன்ற நாடுகளில் இது கடும் குளிர் காலமாகும். அதேபோல கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்ட விடுமுறைகளும் தொடர்ந்து வர இருக்கிறது. எனவே நவம்பர் மாத இறுதியில் இந்த பிளாக் ஃப்ரைடே கொண்டாடப்படுகிறது. இந்த பிளாக் ஃப்ரைடே விற்பனையில் ஏராளமான பிராண்ட் பொருட்கள் சலுகை விலையில் கிடைக்கும்.
அமெரிக்காவில் தொடங்கிய இந்த ஷாப்பிங் விற்பனை ஆனது தற்போது படிப்படியாக உலக அளவில் பிரபலமடைந்தது மட்டுமல்லாமல், இந்தியாவிலும் களைகட்ட தொடங்கியுள்ளது. பிளாக் ஃப்ரைடே விற்பனையின் போது, வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் தளங்களில் பல சலுகைகள் கிடைக்கிறது. இந்த பிளாக் ஃப்ரைடே விற்பனையானது வரும் நாட்களில் அமேசானில் தொடங்க உள்ளது.
கடந்த சில ஆண்டுகளில் இந்தியா போன்ற நாடுகளில் பிளாக் ஃப்ரைடே விற்பனை பிரபலமாகி இருக்கலாம். ஆனால் அதன் வரலாறு பல ஆண்டுகளுக்கு முந்தையது. இந்த பிளாக் ஃப்ரைடே என்ற சொல் 1960-70 களில் பிலடெல்பியாவில் உருவானது. டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள் ‘பிக் ஃப்ரைடே’ என்ற பெயருடன் கடைகளில் பொருட்களை விற்க முயற்சித்தன. அதுமுதல் அந்த பெயரில் விற்பனை நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க:
ரூ.15,000 பட்ஜெட்டிற்குள் கிடைக்கும் சிறந்த 5 ஆண்ட்ராய்டு டேப்லெட்டுகள்…
பிளாக் ஃப்ரைடே விற்பனை தேதி: இந்தியாவில் பிளாக் ஃப்ரைடே விற்பனை அமேசானில் தொடங்க உள்ளது. இந்த ஷாப்பிங் திருவிழா விற்பனை நவம்பர் 29ஆம் தேதி முடிவடையும் எனத் தெரிகிறது. அதே நேரத்தில் சர்வதேச சந்தைகளில் டிசம்பர் 2ம் தேதி வரை தொடரலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த விற்பனையில், பிளிப்கார்ட், அமேசான் இந்தியா மற்றும் டாடா கிளிக் ஆகியவை எலக்ட்ரானிக்ஸ், ஃபேஷன், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் பிற வகை தயாரிப்புகளுக்கு பெரும் தள்ளுபடியை வழங்குகிறது.
விற்பனையில், ஆடியோ கியர் போட், ஜேபிஎல் மற்றும் சோனி தயாரிப்புகளுக்கு 65 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும் என்றும், இதனுடன் சாம்சங் மற்றும் டெல் பிராண்ட் லேப்டாப்களை 50 சதவீதம் தள்ளுபடியுடன் வாங்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. விற்பனையில் ஷாப்பிங் செய்யும் போது, நீங்கள் ஒப்பந்தங்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
இந்தியாவில் பிளாக் ஃப்ரைடே விற்பனையை எந்த பிராண்டுகள் வழங்குகின்றன?:
பிளாக் ஃப்ரைடே விற்பனையின் போது, பல வெளிநாட்டு தளங்களும் சலுகைகளுடன் தயாரிப்புகளை வழங்குகின்றன: