விளையாட்டு
IPL Auction 2025 : ஏலத்தில் வாங்கப்பட்ட 20 வீரர்கள்…. சென்னை அணியின் முழு பட்டியல் இதுதான்…

IPL Auction 2025 : ஏலத்தில் வாங்கப்பட்ட 20 வீரர்கள்…. சென்னை அணியின் முழு பட்டியல் இதுதான்…
அஸ்வின் – தோனி
சவுதி அரேபியாவின் ஜெத்தா நகரில் 2 நாட்களாக நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் பங்கேற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மொத்தம் 20 வீரர்களை வாங்கியுள்ளது. இதன் அடிப்படையில் வரவிருக்கும் ஐபிஎல் 2025 தொடரை எதிர்கொள்ள முதற்கட்டமாக தயாராகியுள்ளது சென்னை அணி.
முதல் நாளில் சென்னை அணி நூர் அகமது, அஷ்வின் உள்ளிட்ட வீரர்களை சென்னை அணி வாங்கியது. சென்னை அணியை பொருத்தளவில் கேப்டன் ருது ராஜ் கெய்க்வாட் ரூ. 18 கோடிக்கும், மதீஷா பதிரனா ரூ. 13 கோடிக்கும், ஷிவம் துபே ரூ. 12 கோடிக்கும், ரவிந்திர ஜடேஜா ரூ. 18 கோடிக்கும், தோனி ரூ. 4 கோடி வழங்கப்பட்டும் தக்க வைக்கப்பட்டனர்.
இந்த 5 வீரர்களை தவிர்த்து பின்வரும் 20 வீரர்கள் நடைபெற்று முடிந்த மெகா ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளனர். அவர்கள் பின்வருமாறு-
டெவோன் கான்வே – ரூ 6.25 கோடி
ராகுல் திரிபாதி – ரூ 3.4 கோடி
ரச்சின் ரவீந்திரா – ரூ 4 கோடி
ரவிச்சந்திரன் அஸ்வின் – ரூ 9.75 கோடி
கலீல் அகமது – ரூ 4.80 கோடி
நூர் அகமது – ரூ.10 கோடி
விஜய் சங்கர் – ரூ 1.2 கோடி
சாம் கர்ரன் – ரூ 2.4 கோடி
ஷேக் ரஷீத் – ரூ 30 லட்சம்
அன்ஷுல் கம்போஜ் – ரூ 3.4 கோடி
முகேஷ் சவுத்ரி – ரூ 30 லட்சம்
தீபக் ஹூடா – ரூ 1.7 கோடி
குர்ஜப்னீத் சிங் – ரூ 2.2 கோடி
நாதன் எல்லிஸ் – ரூ 2 கோடி
ஜேமி ஓவர்டன் – ரூ.1.5 கோடி
கமலேஷ் நாகர்கோடி – ரூ.30 லட்சம்
ராமகிருஷ்ண கோஷ் – ரூ 30 லட்சம்
ஷ்ரேயாஸ் கோபால் – ரூ 30 லட்சம்
வான்ஷ் பேடி – ரூ 55 லட்சம்
ஆண்ட்ரே சித்தார்த் – ரூ 30 லட்சம்
தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியல்: ருதுராஜ் கெய்க்வாட், மதீஷா பத்திரனா, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா மற்றும் எம்எஸ் தோனி.
விடுவிக்கப்பட்ட வீரர்களின் முழு பட்டியல்: மொயீன் அலி, தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், அஜய் மண்டல், முகேஷ் சௌத்ரி, அஜிங்க்யா ரஹானே, ஷேக் ரஷீத், மிட்செல் சான்ட்னர், சிமர்ஜீத் சிங், நிஷாந்த் சிந்து, பிரசாந்த் சோலங்கி, மஹீஷ் ஷர்சுல் தீக்ஷனா, டேரில் மிட்செல், சமீர் ரிஸ்வி, முஸ்தாபிசுர் ரஹ்மான், ரிச்சர்ட் க்ளீசன், அவனிஷ் ராவ் ஆரவெல்லி, டெவோன் கான்வே.