Connect with us

உலகம்

அதானிக்கு அடுத்த ஷாக் கொடுத்த கென்யா

Published

on

Loading

அதானிக்கு அடுத்த ஷாக் கொடுத்த கென்யா


நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 21/11/2024 | Edited on 21/11/2024

அமெரிக்காவில் சூரிய சக்தி மின்சார ஒப்பந்தங்களைப் பெற கடந்த 2020 – 24 காலகட்டத்தில் இந்திய அரசு அதிகாரிகளுக்கு, பிரபல தொழிலதிபர் கவுதம் அதானி நிறுவனம் லஞ்சம் கொடுத்தாக அமெரிக்க செய்தி நிறுவனம் குற்றச்சாட்டு வைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, 20 ஆண்டுகளில் 2 பில்லியன் அமெரிக்க டாலர் வரை லாபம் ஈட்டக்கூடிய சூரிய மின்நிலையத் திட்டம் உள்ளிட்ட ஒப்பந்தங்களை பெறுவதற்கு, கவுதம் அதானி  மற்றும் அவரது மருமகன் சாகர் அதானி உள்ளிட்ட 7 பேர் இந்திய அதிகாரிகளுக்கு 265 மில்லியன் டாலர் வரை லஞ்சமாக கொடுத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும், போலி ஆவணங்கள் மூலம் கடன் பெற்றதாகவும் கவுதம் அதானி மீது நியூயார்க் பெடரல் நீதிமன்றத்தில் அமெரிக்கா வழக்கு ஒன்று தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த அமெரிக்கா நீதிமன்ற நீதிபதி, அதானி லஞ்சம் கொடுக்க சம்மதித்தது உண்மை தான் என்ற பரபரப்பு கருத்தைத் தெரிவித்து, அதானிக்கு பிடிவாரண்ட் பிறபித்து உத்தரவிட்டுள்ளார். அதானிக்கு அமெரிக்கா நீதிமன்றம் பிடிவாரண்ட் கொடுத்திருப்பதையடுத்து, ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தலைவர்கள் அதானியை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். அதானிக்கு எதிராக வைக்கப்பட்ட லஞ்சப் புகார் எதிரொலியாக, அதானி குழுமத்தின் பங்குகள் கடும் விலை சரிவைச் சந்துத்துள்ளன.

Advertisement

அதானி பங்குகளில் முதலீடு செய்த இந்திய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி நிறுவனத்திற்கு ஒரே நாளில் ரூ.12,000 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ், அதானி கிரீன் எனர்ஜி, அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ், அதானி டோட்டல் கேஸ், ஏசிசி மற்றும் அம்புஜா சிமெண்ட்ஸ் ஆகிய 7 அதானி நிறுவனங்களின் பங்குகளை வைத்திருந்த எல்.ஐ.சிக்கு, ரூ.11,728 அளவுக்கு சரிவு ஏற்பட்டுள்ளது.

இதில் அடுத்த அதிரடியாக ரூபாய் 62,128 கோடி ரூபாய் மதிப்பிலான அதானி உடனான ஒப்பந்தத்தை கென்யா ரத்து செய்துள்ளது. அதானி குழுமம் உடனான எரிசக்தி, விமான போக்குவரத்துத் துறை உள்கட்டமைப்பு கைப்பற்றுவதற்கான ஒப்பந்தத்தை கென்யா நாட்டு அதிபரான ரூட்டோ ரத்து செய்வதாக அறிவித்துள்ளார். நடப்பில் உள்ள ஒப்பந்தங்களையும் ஆதாரங்களின் அடிப்படையில் ரத்து செய்வதாக தேசத்துக்காக ஆற்றிய உரையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

  • “எல்லாருமே பார்ப்பீங்க” – விவரிக்கும் ‘கூச முனுசாமி வீரப்பன்’
  • “அதான் அடிச்சு தூக்குனேன்” – கூலாக சொன்ன கூச முனுசாமி வீரப்பன்

கடக்கும் முன் கவனிங்க…

கடக்கும் முன் கவனிங்க…

  • நக்கீரன் 30-11-2024

  • விஜய்யிடம் பா.ஜ.க. பேரம்!

  • இறுதிச் சுற்று! 30.11.24

  • அமலாக்கத்துறையின் அடுத்த பாய்ச்சல்!

  • மாவலி பதில்கள் 30.11.24

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன