இலங்கை
திடீர் வெள்ளம் குறித்து எச்சரிக்கை!

திடீர் வெள்ளம் குறித்து எச்சரிக்கை!
பராக்கிரம சமுத்திரத்தின் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் திடீர் வெள்ளம் குறித்து அவதானமாக இருக்குமாறு விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் டி.பி.விக்ரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அத்துடன் நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் மகாவலி அதிகாரசபை ஆகியவற்றுடன் இணைந்த தொழில்நுட்ப உத்தியோகத்தர்களை அந்தந்த நிலையங்களில் இருக்குமாறு செயலாளர் பொது அறிவித்தலில் அறிவுறுத்தினார்.
அக்கரபத்துவ மற்றும் நில்வலா கங்கை பிரதேசங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உறுதிப்படுத்துவது குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், தற்போது விடுமுறையில் இருக்கும் ஊழியர்களுக்கான அனைத்து விடுமுறைகளையும் ரத்து செய்து, நிலைமையை நிர்வகிக்க போதுமான பணியாளர்கள் இருப்பதை உறுதி செய்ய செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
இப்பிரதேசங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கு அந்தந்த மாவட்ட செயலாளர்களுடன் ஒருங்கிணைந்து செயற்படுமாறும் மகாவலி அதிகார சபை அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.