இலங்கை
நிலவும் சீரற்ற காலநிலை: மின்சாரத் தடை தொடர்பில் CEB க்கு உடன் அறிவிக்கவும்!

நிலவும் சீரற்ற காலநிலை: மின்சாரத் தடை தொடர்பில் CEB க்கு உடன் அறிவிக்கவும்!
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மின் விநியோகத்தில் தடை ஏற்படுமாயின், இது தொடர்பில் உடனடியாக அறிவிக்குமாறு இலங்கை மின்சார சபை பொதுமக்களைக் கேட்டுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் ஏனைய அனர்த்தங்களால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகத்தடை ஏற்படும் நிலையில், அது தொடர்பில் அறிவிப்பதற்கான முறைமையையும் இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
இதன்படி, CEB Care எனும் செயலி ஊடாக அல்லது இலங்கை மின்சார சபையின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதன் மூலம் அல்லது 1987 எனும் துரித இலக்கத்திற்கு குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலம் அறிவிக்க முடியுமெனக் குறிப்பிடப்பட்டுள்ளது. வாரத்தில் ஏழு நாட்களும் 24 மணி நேரமும் சேவையை பெற்றுக்கொள்ள முடியுமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.