Connect with us

விளையாட்டு

‘பவுலிங் ஆக்‌ஷன்’ அன்று முரளிதரன், இன்று ஜஸ்பிரிட் பும்ரா..

Published

on

Loading

‘பவுலிங் ஆக்‌ஷன்’ அன்று முரளிதரன், இன்று ஜஸ்பிரிட் பும்ரா..

இலங்கை ஜாம்பவான் முத்தையா முரளிதனின் பவுலிங் ஆக்‌ஷன் மீது சந்தேகத்தை வெளிப்படுத்தி அவரை பலவீனப்படுத்த முயன்றதை போல், தற்போது பும்ராவின் பவுலிங் ஆக்‌ஷன் மீது ஆஸ்திரேலியா அணி சந்தேகத்தை வெளிப்படுத்துவதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி அடிலெய்ட் மைதானத்தில் டிசம்பர் 6ல் தொடங்கவுள்ளது. பெர்த் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை 295 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி அபார வெற்றியை பெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி கேப்டன் பும்ரா 8 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

Advertisement

இந்த நிலையில் பும்ராவின் மன உறுதியை குலைக்கும் நோக்கத்தில் ஆஸ்திரேலியா மீடியாக்களும், ரசிகர்களும் சில சம்பவங்களை மேற்கொண்டு வருகின்றன. அதில் முதல் சம்பவம் என்னவென்றால், பும்ராவின் பவுலிங் ஆக்‌ஷன் சரியா என்ற கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருப்பது தான். எதிரணியின் சிறந்த பவுலரை இப்படி மனதளவில் பலவீனப்படுத்த ஆஸ்திரேலியா ஏற்கனவே சில முயற்சிகளை செய்துள்ளது.

இலங்கை அணியின் முத்தையா முரளிதரன் உச்சத்தில் இருந்த போது, அவரை எதிர்த்து விளையாடுவதில் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் திணறினர். இதனால் முரளிதரனின் பவுலிங் ஆக்‌ஷனை கேள்விக்குள்ளாக்கினர். 1995ஆம் ஆண்டு நடந்த பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் போது முரளிதரனின் பவுலிங் ஆக்‌ஷன் சரியாக இல்லை என்று கூறி ஏராளமான முறை நோ-பால் கொடுத்தனர்.

ஆனால் முரளிதரன் நேரடியாக ஐசிசி முன் பரிசோதனைக்கு சென்று தனது பவுலிங் ஆக்சனை சரி என்று நிரூபித்தார். தற்போது இதே ஃபார்முலாவை பும்ராவிடம் ஆஸ்திரேலியா மீடியாக்களும், ரசிகர்களும் கொண்டு வந்துள்ளன. 2016ஆம் ஆண்டு முதல் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வரும் பும்ரா, இதுவரை ஒருமுறை கூட ஆக்‌ஷன் சரியில்லை என்ற குற்றச்சாட்டிற்கு ஆளானதில்லை.

Advertisement

இதற்கு முன்பாக ஆஸ்திரேலியா மண்ணில் 2 முறை இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்ற போதும், பும்ரா தான் முதன்மை பவுலராக இருந்துள்ளார். அப்போதெல்லாம் பும்ராவின் ஆக்‌ஷன் மீது எந்த சந்தேகமும் வரவில்லை. ஆனால் இம்முறை பும்ரா கேப்டனாக முன் நின்று, பெர்த் மைதானத்தில் தனது மேஜிக்கை நிகழ்த்தியது ஆஸ்திரேலியா அணியின் ரசிகர்களுக்கு பீதியை கொடுத்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் 3வது முறையாக சொந்த மண்ணில் இந்திய அணியிடம் தொடர்ந்து டெஸ்ட் டெஸ்ட் தொடரில் தோல்வியை சந்தித்தால், ஆஸ்திரேலியா அணியின் சீனியர் வீரர்கள் அனைவருக்கும் இதுவே கடைசி டெஸ்ட் தொடராக அமையும். இதனால் இந்திய அணி வீரர்களை மனதளவில் பலவீனப்படுத்தும் முயற்சியில் ஆஸ்திரேலியா ஈடுபட்டு வருவதாக பார்க்கப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன