இலங்கை
மக்களை மீட்க உலங்கு வானூர்திகளுடன் களமிறங்கிய விமானப்படை!

மக்களை மீட்க உலங்கு வானூர்திகளுடன் களமிறங்கிய விமானப்படை!
இலங்கையில் சீரற்ற காலநிலை காரணமாக அவசர காலங்களில் மக்களை மீட்க 6 உலங்கு வானூர்திகள் தயார் நிலையில் உள்ளதாக விமானப்படை ஊடகப் பணிப்பாளர் குரூப் கப்டன் எரந்த கிகனகே தெரிவித்துள்ளார்.
இரத்மலானை, ஹிகுராக்கொட, பலாலி, வீரவில, அம்பாறை, அனுராதபுரம் விமானப்படை தளங்களில் உலங்கு வானூர்திகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும்
அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்காக விசேட பயிற்சி பெற்ற விமானப்படை படைப்பிரிவின் விசேட அதிரடிப்படையினர் தயார்படுத்தப்பட்டுள்ளதாகவும்
விமானப்படையின் கண்காணிப்பு விமானங்கள் அனர்த்த நிலைமைகளை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.[ஒ]