Connect with us

பொழுதுபோக்கு

விரட்டி விட்ட ராதிகா: தேடி சென்று உதவிய பாக்யா; கோபி திருந்த வாய்ப்பு இருக்கா?

Published

on

Baakiyalaks124

Loading

விரட்டி விட்ட ராதிகா: தேடி சென்று உதவிய பாக்யா; கோபி திருந்த வாய்ப்பு இருக்கா?

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் தினசரி எபிசோடுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், ராதிகா வெளியில் துரத்திவிட்டதால் கோபி அடுத்து என்ன செய்வார் என்ற விறுவிறுப்பும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.இதனிடையே இன்றைய எபிசோட்டில், காரில் சென்றுகொண்டிருக்கும் கோபி, இனியா சொன்னதை நினைத்துக்கொண்டு இருக்க, அப்போது அவருக்கு நெஞ்சுவலி வருகிறது. இதனால், முதலில் செழியனுக்கு போன் செய்ய அவன் போனை எடுக்கவில்லை. இதனால், ராதிகாவுக்கு போன் செய்ய ராதிகாவும் போனை எடுக்கவில்லை. ஆனாலும் கோபி தொடர்ந்து போன் செய்துகொண்டே இருக்க ராதிகா சுவிட்ச் ஆப் செய்துவிடுகிறார்.அதன்பிறகு கோபி ராதிகாவின் அம்மாவுக்கு போன் செய்ய, அவர் ராதிகாவிடம் சொல்கிறார், ஆனால் ராதிகா போனை எடுக்க வேண்டாம் பேசமால் போய் படு என்று சொல்லிவிடுகிறாள். அதன்பிறகு கோபி இனியாவுக்கு போன் செய்ய அவளும் போனை எடுக்காததால் பாக்யாவுக்கு போன் செய்கிறார். பாக்யாவும் கோபியின் போனை பார்த்துவிட்டு இவர் எதற்கு இப்போது போன் செய்கிறார் என்று நினைத்து எடுக்காமல் இருக்கிறாள்.அதன்பிறகு ஒரு வாய்ஸ் மெசேஜ் வர அதை கேட்டு பாக்யா கோபிக்கு போன் செய்ய, கோபி தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதாகவும் தான் இப்போது காரில் இருப்பதாகவும் சொல்லிவிட்டு மயங்கி விடுகிறார். இதன்பிறகு பாக்யா ராதிகா வீட்டுக்கு சென்று கதவை தட்ட, அங்கு யாரும் எழுந்திரிக்கவில்லை. இதனால் பாக்யா தனியாக காரை எடுத்துக்கொண்டு கோபியை தேடி அலைகிறாள். ஒரு கட்டத்தில் கோபியை கண்டுபிடித்து அவரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் சேர்க்கிறாள்.அடுத்த நாள் வீட்டில் இருந்து அனைவரும் கோபியை பார்க்க வர, ஈஸ்வரி தான் கோபியை பார்க்க உள்ளே போக வேண்டும் என்று சொல்ல, டாக்டர்ஸ் விடவில்லை. இதனால் பாக்யா ஈஸ்வரிக்கு ஆறுதல் சொல்ல, இந்த விஷயத்தை ராதிகாவுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று சொல்கிறாள். அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன