Connect with us

இந்தியா

அடிக்கடி ரிப்பேர்… கடுப்பாகி கடை முன்பே எலக்ட்ரிக் பைக்கை கொளுத்திய இளைஞர்!

Published

on

Loading

அடிக்கடி ரிப்பேர்… கடுப்பாகி கடை முன்பே எலக்ட்ரிக் பைக்கை கொளுத்திய இளைஞர்!

சென்னை அம்பத்தூரில் இருக்கும் ஏதர் எலக்ட்ரிக் பைக் ஷோ ரூம்  முன்பு எலக்ட்ரிக் பைக் கொளுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் எலக்ட்ரிக் பைக் விற்பனை அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் ஆயிரக்கணக்கான எலக்ட்ரிக் பைக்குகள் விற்பனையாகி வருகின்றன. இந்த பைக்கால் காற்று மாசு ஏற்படாததால், சுற்றுச்சூழலின் மீது ஆர்வம் கொண்டவர்கள் பலர் இந்த எலக்ட்ரிக் பைக்குகளை வாங்கி வருகின்றனர். இந்த பைக்கை எளிதாக வீட்டிலேயே சார்ஜ் செய்துகொள்ளலாம்.

Advertisement

இருப்பினும் சமீப காலமாக இந்தியாவில், எலக்ட்ரிக் பைக் வாங்கிய பலர் தங்களது பைக் அடிக்கடி பழுதடைந்து வருவதாகப் புகார் அளித்து வருகிறார்கள். இதனால் பலர் தாங்கள் வண்டி வாங்கிய ஷோ ரூம் முன்பே தங்களது பைக்குகளை எரித்த சம்பவங்களும் நடந்துள்ளன.

கடந்த செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி கூட பெங்களூருவில் நதீம் என்பவர்,  தான் வாங்கிய ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அடிக்கடி பழுதடைந்து வந்ததால் தான் வண்டி வாங்கிய ஷோ ரூம் முன்பே தனது வண்டியை தீ வைத்து கொளுத்திவிட்டார்.

இந்த நிலையில் சென்னை திருமுல்லைவாயலை சேர்ந்த பார்த்தசாரதி என்பவர் சமீபத்தில் அம்பத்தூரில் உள்ள ஏதர் ஷோ ரூம்மில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கியுள்ளார்.

Advertisement

ஆனால் அந்த வண்டி அடிக்கடி பழுதடைந்துள்ளது. சரி செய்வதற்காக ஷோரூமிற்கு எடுத்துச் சென்றுள்ளார். ஆனால் அவர்கள் அதைச் சரி செய்யாமல் இழுத்தடித்து வந்துள்ளனர்.

இதனால் கோபம் அடைந்த பார்த்தசாரதி அம்பத்தூர் ஏதர் ஷோரூமிற்கு நேற்று (நவம்பர் 28) தனது வண்டியை எடுத்துவந்து, தீ வைத்துக் கொளுத்தியுள்ளார். ஆனால் அருகிலிருந்தவர்கள் உடனடியாக தீயை அணைத்துள்ளனர். இதனால் வண்டிக்கு பெரிதாக பாதிப்பு ஏற்படவில்லை.

ஆனால் தனது ஆதங்கத்தைச் சாலையிலிருந்தபடி கத்தியபடியே பார்த்தசாரதி வெளிப் படுத்திவந்துள்ளார்.

Advertisement

இதனை அறிந்து அங்கு வந்த போலீசார் அவரை சமாதானப்படுத்தியுள்ளனர். இதனையடுத்து, ஏதர் ஷோ ரூம் ஊழியர்கள் பார்த்தசாரதியின் பிரச்சினையை சரி செய்து தருவதாக உறுதியளித்தனர்.

இதற்கிடையில், பார்த்தசாரதி ரோட்டில் இருந்து கூச்சலிட்டு வந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

செய்திகளைஉடனுக்குடன்பெறமின்னம்பலம்வாட்ஸப்சேனலில்இணையுங்கள்….

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன