Connect with us

சினிமா

ஆர்.ஜே.பாலாஜியின் சொர்க்கவாசல்…! படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ…

Published

on

Loading

ஆர்.ஜே.பாலாஜியின் சொர்க்கவாசல்…! படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ…

இன்று நடிகர் ஆர்.ஜே.பாலாஜியின் நடிப்பில் உருவான சொர்க்கவாசல் திரைப்படம் ரிலீஸாகியுள்ளது. இதனை பா ரஞ்சித்தின் உதவி இயக்குனரான சித்தார்த் இயக்கியுள்ளார். இவருடைய  முதல் படமாகவே இது அமைந்துள்ளது.இந்நிலையில் படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம். ஆர்ஜே பாலாஜியின் நடிப்பு அபாரம். அனிருத் இப்படத்தில் ஒரு பாடல் பாடி இருப்பது மேலும் பிளஸாக அமைந்துள்ளது. காமெடி நடிகராக வலம் வந்த ஆர்.ஜே.பாலாஜி மாஸ் நடிகராக செம மாற்றம் காட்டி இருக்கிறார். எமோஷனல் காட்சிகளிலும் ஆக்‌ஷன் காட்சிகளிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.ஆர் ஜே பாலாஜி  உணவு விற்பனையாளராக சுமுகமாக அவர் வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது. இருந்தாலும் ஒரு கொலை குற்றத்திற்காக குற்றவாளிகள் கைது செய்யப்படும் போது எந்த தவறும் செய்யாத ஆர் ஜே பாலாஜி கைதாகி சிறைக்கு செல்கிறார். அவர் தன்னை நிரபராதி என்று எப்படி நிரூபிக்கிறார் சிறையில் இருந்து எவ்வாறு வெளி வருகிறார் என்பதே மீதி கதை.படத்தில் முதல் பாகத்தில் செல்வராகவனின் நடிப்பு அனைவரும் பாராட்டுக்குரியதாக இருந்தது. கவனத்தையும் பெற்றது. நட்டி கருணாஸ் ஆர் ஜே பாலாஜி அம்மா மனைவி கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்திருந்தனர். வழக்கமாக ஆர்.ஜே பாலாஜி நகைச்சுவை மற்றும் சமூக நீதி கருத்துக்களை சொல்பவராக இல்லாமல் இந்த படத்தில் முற்றிலும் வேறுபட்ட பரிமாணாமத்தில் நடித்திருக்கிறார்.மேலும் சொர்க்கவாசல் திரைப்படம் உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. வன்மம் ரத்தம் காயம் ஆகியவற்றை கொண்டிருப்பதால் சிறுவர்கள் பார்ப்பதற்கு ஏற்புடையதல்ல. ஆகையால் இந்த திரைப்படம் பாராட்டப்படுகிறது. 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன