திரை விமர்சனம்
ஒரே இரவில் நடக்கும் தொடர் மர்மங்கள்.. சதீஷின் சட்டம் என் கையில் எப்படி இருக்கு.? முழு விமர்சனம்

ஒரே இரவில் நடக்கும் தொடர் மர்மங்கள்.. சதீஷின் சட்டம் என் கையில் எப்படி இருக்கு.? முழு விமர்சனம்
பொதுவாக மலையாள திரையுலகில் தான் க்ரைம் திரில்லர் படங்கள் அதிக அளவில் வெளிவரும். அது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறுவதுண்டு. அதேபோல் மலையாள சினிமாவை மிஞ்சும் அளவுக்கு தமிழிலும் இப்போது திகில் படங்கள் வெளிவர தொடங்கிவிட்டன.
அந்த வரிசையில் நடித்துள்ள கிரைம் திரில்லர் படமான இன்று ரிலீஸ் ஆகி உள்ளது. சாச்சி இயக்கியுள்ள இப்படத்தில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதன் விமர்சனத்தை இங்கு விரிவாக காண்போம்.
கதையின் ஆரம்பத்திலேயே சதீஷ் சற்று பதற்றத்தோடு ஏற்காடு மலையில் காரில் பயணித்துக் கொண்டிருக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனத்தில் வரும் ஒரு இளைஞன் மீது கார் மோதி விடுகிறது.
இதனால் பதறிப் போகும் சதீஷ் அந்த உடலை எடுத்து கார் டிக்கியில் போட்டுக்கொண்டு தன் பயணத்தை தொடர்கிறார். ஆனால் இடையில் போலீஸ் அவர் குடித்துவிட்டு வண்டி ஓட்டியதாக கைது செய்கிறது. அதன் பிறகு காவல் நிலையத்தில் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
அதே நேரத்தில் ஏற்காட்டில் ஒரு இளம் பெண் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அந்த கேசை சதீஷ் மேல் போடுவதற்கு போலீஸ் முயற்சி செய்கிறது. இதிலிருந்து அவர் தப்பித்தாரா? இளம் பெண்ணை கொன்றது யார்? சதீஷ் கார் டிக்கியில் இருந்த உடல் என்ன ஆனது? போன்ற பல கேள்விகளுக்கு திகிலுடன் விடை அளிக்கிறது இப்படம்.
ஹீரோ போல் இல்லாமல் கதையின் நாயகனாக இறங்கி இருக்கும் சதீஷ் இதில் தன் காமெடி தனத்தை மூட்டை கட்டி விட்டு சீரியஸாக நடித்துள்ளார். இதுவே படத்திற்கு பலமாகவும் பாராட்டவும் வைத்துள்ளது.
அதிலும் காவல் நிலையத்தில் இருந்தபடியே அவர் கொடுக்கும் பெர்பார்மன்ஸ் சைலண்ட் சம்பவம் தான். படம் ஆரம்பித்தபோது சுவாரஸ்யம் குறைவாக இருந்தாலும் அடுத்தடுத்த காட்சிகள் அதை ஓரம் கட்டி விடுகிறது.
மேலும் ஒரே இரவில் நடக்கும் படி கதையை அமைத்துள்ள இயக்குனர் அதை சுவாரசியமாகவும் கொண்டு சென்றுள்ளார். திகில் படங்களுக்கே உரிய எதிர்பாராத திருப்பங்களுடன் கிளைமேக்ஸ் காட்சியும் ஆடியன்சை திருப்திப்படுத்தும் வகையில் இருக்கிறது.
அதேபோல் த்ரில்லர் கதைக்கு ஏற்ற வகையில் பின்னணி இசையும், கேமரா கோணமும் ஸ்கோர் செய்துள்ளது. அந்த வகையில் சட்டம் என் கையில் திரில்லர் விரும்பிகளுக்கு ஏற்ற படம் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.