Connect with us

விநோதம்

 கெட்டுப்போகாத ஒரே உணவு எது தெரியுமா…!

Published

on

Loading

 கெட்டுப்போகாத ஒரே உணவு எது தெரியுமா…!

(இன்று ஒரு தகவல்)

உலகில் சுமார் 3000 வருடங்களுக்கு கெட்டுப்போகாத ஒரே உணவு வகை தேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தேன், மற்றும் தேனின் உள்ளடக்கப் பொருட்கள், பத்தாண்டுகள் தொடங்கி நூற்றாண்டுகள் வரை பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

வரம்பிற்குட்பட்ட ஈரப்பதமே தேனைப் பாதுகாப்பதிலுள்ள முக்கிய நுணுக்கமாக அமைந்துள்ள நிலையில், 3000 ஆண்டுகள் ஆனாலும் தேன் கெட்டு போகாது என கூறப்படுகிறது.  

பூமியில் கண்டுபிடிக்கப்பட்ட உணவுகளிலேயே மனித ரத்தத்துக்கு மிக நெருக்கமான ஒரே உணவுப் பொருள் தேன் என கூறப்படுகிறது. ரசாயனத் தன்மையில் சிறிதளவு மாற்றம் செய்தாலே அது மனித ரத்தத்தின் தன்மையைப் பெற்றுவிடும்.
இந்த நிலையில், தினமும் ஒரு அவுன்ஸ் தேன் பருகினாலே, ஒரு நபரின் உடலில் பாரியளவில் மாற்றங்கள் ஏற்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

ஏறத்தாழ 2700 வருடங்களாக தேன் பல நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பழங்காலத்திலிருந்தே தேன் சேகரித்தல் இருந்திருக்கிறது.

பத்தாயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே தேன் வேட்டை ஆரம்பமாகியிருக்கலாமென ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், ஃப்ரக்டோஸ், க்ளுகோஸ் போன்றவை தேனில் உள்ளடங்கியுள்ள நிலையில், அதில் கொழுப்புச் சத்து சிறிதளவும் இல்லை.

Advertisement

இந்த பின்னணியில், உலகிலேயே கெட்டுப்போகாத ஒரே உணவு வகை தேன் என தெரிவிக்கப்பட்டாலும், தற்போது கடைகளில் விற்பனை செய்யப்படும் தேன் போத்தல்களில் காலாவதி திகதி குறிப்பிடப்பட்டுள்ளது.

சுத்தமான தேனுக்கு காலவதி திகதி இல்லதா நிலையில், தற்போது சந்தைகளில் இராசாயணங்கள் கலந்த தேன் வகைகளே விற்பனை செய்யப்படுகின்றன.

சுத்தமான தேன் கிராமப்புரங்களில் மாத்திரம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.  

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன