இந்தியா
கோயில்களுக்குள் தொலைபேசி கொண்டு செல்ல தடை

கோயில்களுக்குள் தொலைபேசி கொண்டு செல்ல தடை
“கோயில்களுக்குள் தொலைபேசி கொண்டு செல்வதற்கான தடையினை படிப்படியாக செயல்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். இந்நடைமுறையானது நீதிபதி மகாதேவன் உத்தரவின்படி திருச்செந்தூர், மதுரை, பழனி போன்ற கோயில்களில் தற்போது செயல்பாட்டில் உள்ளது. தொலைபேசிகளை பாதுகாப்பதற்கான கட்டமைப்புகளை உருவாக்கி அனைத்து கோயில்களிலும் இந்நடைமுறையை படிப்படியாக செயல்படுத்துவதற்கு இந்து சமய அறநிலையத்துறை முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது,” என இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள பாடி, படவேட்டம்மன் திருக்கோயில் வளாகத்தில் தமிழக திருக்கோயில்கள் மற்றும் உபயதாரர்கள் சார்பில் சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு வழங்குவதற்காக முதற்கட்டமாக, 5 லட்சம் பிஸ்கெட் பக்கெட்டுகள் மற்றும் 2,000 பிளாஸ்க்குகளை அனுப்பி வைக்கும் பணிகளை கொடியசைத்து இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.