சினிமா
சீன திரையரங்குகளில் ஓங்கி ஒலிக்கும் மகாராஜா.. விஜய் சேதுபதி வெளியிட்ட வைரல் பதிவு

சீன திரையரங்குகளில் ஓங்கி ஒலிக்கும் மகாராஜா.. விஜய் சேதுபதி வெளியிட்ட வைரல் பதிவு
தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் சக்கைப் போடு போட்ட திரைப்படங்கள் ஒன்றுதான் மகாராஜா. தந்தை மகளுக்கு இடையிலான பந்த பாசத்தை மையமாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. அதில் எதிர்பாராத திருபங்களையும் எமோஷனல் ரீதியான வலிகளையும் உள்ளடக்கி இந்த படம் வெளியானது.நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த திரைப்படம் தான் மகாராஜா. இந்த திரைப்படம் விஜய் சேதுபதிக்கு 50-வது திரைப்படமாக அமைந்ததோடு வெற்றி படமாகவும் காணப்படுகிறது. கிட்டதட்ட தமிழில் 100 கோடி ரூபாயை கடந்து சாதனை படைத்திருந்தது. விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது மகாராஜா.d_i_aதமிழில் இந்த படத்திற்கு கிடைத்த நல்ல வரவேற்பை தொடர்ந்து இந்த படம் பிற மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டது. அது மட்டுமின்றி சீனாவில் மகாராஜா திரைப்படம் சுமார் 40,000 திரையரங்குகளில் திரையிடப்பட்டதாக கூறப்பட்டது.அதன்படி இந்த படம் சீனாவில் வெளியிடப்பட்டு ஆறு நாட்களை கடந்த நிலையில் கிட்டத்தட்ட 5.4 கோடி வரை வசூலித்து உள்ளதாம். எனினும் 40 ஆயிரம் திரையரங்குகளில் இந்த படம் ரிலீஸ் ஆகி உள்ளதால் இதன் வசூல் நாளாந்தம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நிலையில், மகாராஜா திரைப்படம் சீனாவில் திரையிடப்பட்டதை முன்னிட்டு விஜய் சேதுபதி அதற்கு நன்றி தெரிவித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் ஸ்டோரியில் வெளியிட்டுள்ளார். தற்போது குறித்த போஸ்டர் வைரலாகி வருகின்றது.