சினிமா
‘சென்னைக்கு நன்றி…பின்னர் சந்திக்கிறேன்’ சுந்தரி சீரியல் நடிகையின் உருக்கமான பதிவு..!

‘சென்னைக்கு நன்றி…பின்னர் சந்திக்கிறேன்’ சுந்தரி சீரியல் நடிகையின் உருக்கமான பதிவு..!
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி, தொடர்ந்து டிஆர்பி பட்டியலில் முதலிடம் பிடித்த சுந்தரி சீரியல், 2 சீசன்களாக 1000 எபிசோடுகளை கடந்துள்ள நிலையில், இவ்வாரத்துடன் தனது பயணத்தை நிறைவு நிறைவு செய்ய உள்ளது. சீரியல் கிளைமேக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்ட அன்று, இதில் நடித்த நடிகர்கள் அனைவரும் உருக்கமாகக் கண்கலங்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. சுந்தரி சீரியல் முடிவுக்குப் பிறகு, கதாநாயகி கேப்ரியல்லா மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்துள்ளார். அவர் தான் கர்ப்பமாக இருக்கிறார் என்றும், குடும்பத்துடன் நேரம் செலவிட மீடியாவில் இருந்து சில காலம் விலக இருக்கிறார் என்றும் அறிவித்தார்.சுந்தரி முடிவுக்குப் பிறகு பல போட்டோ ஷூட்களில் கலந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்ட கேப்ரியல்லா, தனது ஓய்விற்கான முடிவின் பின்னணி தொடர்பாக, “நன்றி “சென்னை”……..மீண்டும் அன்போடு பிறகு சந்திக்கிறேன்,Break for my media journey” என தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார்.