சினிமா
ஜெயிலர் 2 ஷூட்டிங்கில் சிக்கல்.. ரஜினியால் ஏற்படும் தாமதம்

ஜெயிலர் 2 ஷூட்டிங்கில் சிக்கல்.. ரஜினியால் ஏற்படும் தாமதம்
தற்போது லோகேஷ் கனகராஜின் கூலி படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் அடுத்த வருடம் மார்ச் மாதம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. அடுத்ததாக ரஜினி நடிக்கப் போகும் படம் தான் ஜெயிலர் 2. நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் படம் மிகப்பெரிய ஹிட்டானது.
இதைத்தொடர்ந்து இப்போது ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இருக்கிறார். இதற்கான ப்ரோமோ வீடியோவை ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12 வெளியிட படக்குழு முடிவு எடுத்திருக்கிறது. ஆனால் இப்போது சூட்டிங் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது.
அதாவது கனமழை மற்றும் புயல் காரணமாக ரஜினி டிசம்பர் 5ஆம் தேதிக்கு மேல் ஷூட்டிங் நடத்தி கொள்ளலாம் என்று கூறியிருக்கிறாராம். ஆகையால் இப்போது ஜெயிலர் 2 படத்தின் ப்ரோமோ சூட்டிங் தள்ளி போயிருக்கிறது. ஆனாலும் எப்படியும் ரஜினியின் பிறந்தநாளுக்கு ப்ரோமோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதோடு இதே நாளில் கூலி படத்தின் அப்டேட்டும் படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கலாம். ஏற்கனவே கூலி படத்தின் சூட்டிங் படு பயங்கரமாக நடந்து கொண்டிருந்த நிலையில் ரஜினியின் உடல்நிலை பிரச்சனை காரணமாக சில நாட்கள் தள்ளி வைக்கப்பட்டு இருந்தது.
ஆனாலும் ரஜினி இந்த வயதிலும் தன்னுடைய அடுத்தடுத்த படங்களை புக் செய்து பிஸியாக வைத்துக் கொண்டிருக்கிறார். லோகேஷ் லியோ படத்தில் சற்று சறுக்கிய நிலையில் கூலி படத்தை தரமாக கொடுக்க வேண்டும் என்று கவனமாக செயல்பட்டு வருகிறார்.
இந்த வகையில் நெல்சன் எப்படி பீஸ்ட் படத்தில் அடி வாங்கிய நிலையில் ஜெயிலர் என்ற மாஸ் ஹிட் படத்தை கொடுத்தார். அதேபோல் தான் லோகேஷ் கனகராஜ் ரஜினி மூலம் தரமான கம்பேக் கொடுப்பார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.