நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 28/11/2024 | Edited on 28/11/2024

ஷங்கர் – ராம் சரண் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘கேம் சேஞ்சர்’. கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்க, எஸ்.ஜே. சூர்யா, ஸ்ரீகாந்த் மேகா, அஞ்சலி, நவீன் சந்திரா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் பெரும் பொருட்செலவில் தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

கார்த்திக் சுப்புராஜ் கதை எழுதியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் நடந்தது. இறுதிக்கட்டத்தை தற்போது எட்டியுள்ளது. இப்படம் அரசியல் சார்ந்து பல விஷயங்களைப் பேசும் படமாக இருக்கும் எனப் பரவலாகச் சொல்லப்படுகிறது. இப்படத்தின் முதல் பாடலான ‘ஜரகண்டி’ மற்றும் இரண்டாவது பாடலான ‘ரா மச்சா மச்சா’ ஆகியவை இதுவரை வெளியாகியுள்ளது.  

Advertisement

இதனைத் தொடர்ந்து படத்தின் டீசர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில் படத்தின் மூன்றாவது பாடலான ‘நானா ஹைரானா’ தற்போது வெளியாகியுள்ளது. இப்படலை ஸ்ரேயா கோஷல் மற்றும் கார்த்தி இருவரும் பாடியுள்ளனர். இந்த பாடலும் காதல் பாடலாக அமைந்துள்ளது. அதோடு ஷங்கர் படத்தில் இடம்பெறும் பிரம்மாண்டமான காட்சிகள் இதிலும் இடம்பெற்றிருக்கிறது.