விநோதம்
புதிய நீர் உலகைக் கண்டுபிடித்த ஜேப்ஸ் வெப் தொலைநோக்கி!:

புதிய நீர் உலகைக் கண்டுபிடித்த ஜேப்ஸ் வெப் தொலைநோக்கி!:
(புதியவன்)
பூமியைப் போல வேறு கிரகங்களிலும் மனிதர்களால் வாழ முடியுமா என்ற ஆராய்ச்சியில் பல வருடங்களாக விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
விண்வெளியை ஆய்வு செய்வதற்காக ஜேம்ஸ் வெப் எனும் தொலைநோக்கியானது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியானது, புதிய தொலைதூர கோள் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது.
சுமார் 70 ஒளியாண்டுகளுக்கு அப்பால் உள்ள இந்த TOI-270 d கோளானது , பூமியைப் போல இரண்டு மடங்கு பெரியதாக உள்ளதாம். இதன் வளிமண்டல தோற்றமானது நீராவி மற்றும் கார்பன் டை ஒக்சைட் நிறைந்ததாகவும் உள்ளன.
ஹைட்ரஜன் நிறையப் பெற்ற வளிமண்டலத்தைக் கொண்டுள்ள இந்தக் கோள், முழுவதும் கடலைக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதேநேரம் கனடாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சிலர், இந்த கோளில் அதிக வெப்பநிலையில் தண்ணீர் இருக்கலாம். இதன் வெப்பம் 4ஆயிரம் டிகிரி செல்சியஸ் வரை எட்டக்கூடும். அடர்த்தியான வளிமண்டலத்துடன் இந்த கிரகமானது பாறைகளை மேற்பரப்பில் கொண்டிருக்கும் என்பது இவர்களின் வாதம்.
வேதியியலின் அடிப்படையில் ஹைட்ரஜன் வளம் அதிகமுள்ள வளிமண்டலத்தில் கண்டிப்பாக அமோனியா இருக்க வேண்டும். ஆனால், இந்தக் கோளில் அமோனியா இல்லை. எனவே இங்கு கண்டிப்பாக கடல் தான் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.(ப)