இந்தியா
புத்தாண்டில் புதிய தடத்தில் தொடங்கப்படும் வந்தே பாரத் ரயில் சேவை… பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்…

புத்தாண்டில் புதிய தடத்தில் தொடங்கப்படும் வந்தே பாரத் ரயில் சேவை… பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்…
வரும் புத்தாண்டில் புதிய தடத்தில் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கி வைக்கப்படவுள்ளது. இதனைபிரதமர் மோடி தொடங்கி வைக்கவுள்ளார்.
காஷ்மீரின் அழகிய பள்ளத்தாக்குகளை நீங்கள் பார்வையிட விரும்பினால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. இந்திய ரயில்வே காஷ்மீருக்கு சிறப்பு வந்தே பாரத் ரயில்களை தற்போது தயார் செய்து வருகிறது. இந்த ரயில் ஸ்ரீநகர் மற்றும் புது டெல்லியை இணைக்கும் மற்றும் உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் இணைப்பில் இயக்கப்படும். இந்த வந்தே பாரதத்தை பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி மாதத்தில் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
எகனாமிக் டைம்ஸ் அறிக்கையின்படி, இந்த வந்தே பாரத் சிறப்பு வெப்பமூட்டும் அம்சங்களைக் கொண்டிருக்கும். வெப்பநிலை பூஜ்ஜிய டிகிரியை எட்டும் பகுதிகளுக்காக இந்த ரயில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில்களில் தண்ணீர் தொட்டிகளில் சிலிகான் ஹீட்டிங் பேட் வசதி இருக்கும். இது தவிர, நீர் உறைவதைத் தடுக்க குழாய்களுக்கான வெப்பமூட்டும் கேபிளை ஆட்டோமேட்டிக்காக ஒழுங்குபடுத்தும் வசதியும் இருக்கும்.
காஷ்மீரின் உயரமான மலைகளையும், உலகின் மிக உயரமான பாலத்தையும் கடந்து அழகிய காஷ்மீர் பள்ளத்தாக்குக்குள் நுழையும் இந்த ரயில், 800 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தை கடக்கும். இந்தப் பயணம் 13 மணி நேரத்தில் நிறைவடையும்.
பயணிகள் டெல்லியில் இரவு 7:00 மணிக்கு ரயிலில் ஏறி, காலை 8:00 மணிக்கு ஸ்ரீநகர் சென்றடைவார்கள். சிறப்பு வந்தே பாரதத்தில் 3 பிரிவுகள் இருக்கும் – ஏசி முதல் வகுப்பு, ஏசி 2 அடுக்கு மற்றும் ஏசி 3 அடுக்கு. இதன் கட்டணம் ரூ.2,000 முதல் ரூ.3,000 வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.