இந்தியா
மீண்டும் புயலாக வலுப்பெறுகிறதா? – 30-ம் தேதி முக்கிய சம்பவம் இருக்கு… தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கணிப்பு

மீண்டும் புயலாக வலுப்பெறுகிறதா? – 30-ம் தேதி முக்கிய சம்பவம் இருக்கு… தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கணிப்பு
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஃபெங்கல் என்ற புயலாக, இன்று காலைக்குள் மாறும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே கணித்திருந்தது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நேற்று இரவு 11.30 மணி நிலவரப்படி, முந்தைய 6 மணிநேரங்களில் மணிக்கு 9 கிலோமீட்டர் வேகத்தில் வடகிழக்கு திசையில் நகர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வடக்கு நோக்கி நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு, வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், வடமேற்கு திசையில் நகர்ந்து, வடதமிழ்நாடு, புதுச்சேரி கடலோரப் பகுதியில் காரைக்கால் – மகாபலிபுரம் இடையே நாளை காலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையைக் கடக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரையைக் கடக்கும்போது, மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் “சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று மதியம் முதல் மீண்டும் கனமழை தொடங்கி, இரவில் மேலும் தீவிரமடையும் என கணித்துள்ள தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப், குறிப்பாக நாளை இந்த 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Look at the convection (clouds), the system has intensified again, now close to 30 knots (note 35 knots is cyclone and name will be given). With relaxation of shear (refer 3rd pick), it will intensify again and will breach 35 knots and expected to reach strength upto 40-45 knots.… pic.twitter.com/PUzaa5uNpT
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ மேகங்கள் வலுவாக உருவாகியுள்ளதால், மழை தொடங்கியதும் மதியம், மாலை, இரவு நேரங்களில் மழையின் தீவிரம் அதிகரிக்கும். 29 முதல் 30-ஆம் தேதி வரை, குறிப்பாக காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு (KTCC) முதல் மரக்காணம் வரையிலான கடலோர பகுதிகளில் மிகக் கனமழை முதல் அதி கன மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக 30ஆம் தேதி, KTCC பகுதியில் மழைக்கு துல்லியமாக கண்காணிப்பு தேவைப்படுகிறது. இருப்பினும் இதன் வலுபெறுதல் குறித்த அதிகாரப்பூர்வ முகமை என்ன கூறுகிறது என்பதை பார்ப்போம்.” எனவும் பதிவிட்டுள்ளார்.