இந்தியா
முடிவுக்கு வந்த முன்னாள் திமுக எம்எல்ஏ வி.பி ராஜன் மீதான வழக்கு

முடிவுக்கு வந்த முன்னாள் திமுக எம்எல்ஏ வி.பி ராஜன் மீதான வழக்கு
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.பி ராஜன் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராஜபாளையம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் வி பி ராஜன். கடந்த 2013 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது, புதுக்கோட்டையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் அவர் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், இவர் மீதான அவதூறு வழக்குகளை திரும்ப பெறுவதாக திமுக அரசு அரசானை பிறப்பித்தது. இருந்தபோதிலும் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் இருந்த வழக்கு ரத்து செய்யப்படாததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் விபி ராஜன் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு விசாரித்த நீதிபதி பி வேல்முருகன், வி.பி ராஜன் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.