உலகம்
வங்கதேச மாஜி பிரதமர் கலிதா ஜியா ஊழல் வழக்கில் விடுவிப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு!

வங்கதேச மாஜி பிரதமர் கலிதா ஜியா ஊழல் வழக்கில் விடுவிப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு!
வங்க தேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா தன் பதவி காலத்தில் தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஜியா அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனம் மூலம் பணம் சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த வழக்கில் கலிதா ஜியாவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த 2018ம் ஆண்டு டாக்கா நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி சுமார் 770 நாள்களுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த கலிதா ஜியா கொரோனா தொற்று காலத்தில் வீட்டு சிறைக்கு மாற்றப்பட்டார்.
இதனிடையே கலிதா ஜியா வங்கதேச உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் அவரை விடுவித்து நேற்று உத்தரவிட்டது.