இந்தியா
Fengal Cyclone: உருவானது ஃபெஞ்ஜல் புயல்.. எங்கு, எப்போது கரையை கடக்கும்? – வானிலை மையம் கணிப்பு!

Fengal Cyclone: உருவானது ஃபெஞ்ஜல் புயல்.. எங்கு, எப்போது கரையை கடக்கும்? – வானிலை மையம் கணிப்பு!
வங்கக்கடலில் ஃபெஞ்ஜல் புயல் உருவானதாக இந்தியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஃபெஞ்ஜல் என்ற புயலாக, இன்றுக்குள் மாறும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே கணித்திருந்தது. புயல் எச்சரிக்கை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் ஆகிய ஆகிய மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே விட்டுவிட்டு மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள் மட்டுமின்றி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.
இதையும் படிங்க:
இன்று உருவாகிறது புயல்… நாளை மதியம் வரை வெளியே வரவேண்டாம்… இந்த 5 மாவட்ட மக்களுக்கு தனியார் வானிலை ஆய்வாளர் அலர்ட்
இந்த நிலையில், வங்கக்கடலில் ஃபெஞ்ஜல் புயல் உருவானதாக இந்தியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் நாளை பிற்பகல் கரையை கடக்கும் எனவும் புயல் கரையை கடக்கும்போது, மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக இந்த புயல் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வர வாய்ப்பு உள்ளதால், தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என வானிலை மையம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.