Connect with us

தொழில்நுட்பம்

Google : கூகுளில் தேடும்போது இந்த விஷயங்களை பண்ணிடாதீங்க… அப்புறம் அவ்ளோதான்… உஷார்…!

Published

on

Google : கூகுளில் தேடும்போது இந்த விஷயங்களை பண்ணிடாதீங்க... அப்புறம் அவ்ளோதான்... உஷார்...!

Loading

Google : கூகுளில் தேடும்போது இந்த விஷயங்களை பண்ணிடாதீங்க… அப்புறம் அவ்ளோதான்… உஷார்…!

பில்லியன் கணக்கான யூசர்கள் கூகுளின் சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர். இவ்வளவு பெரிய பயனர் அடித்தளத்தை கொண்டுள்ளதால் மோசடிக்காரர்கள் கூகுளை தவறான வழியில் பயன்படுத்தி கொள்கின்றனர். இந்த யூசர்களை டார்கெட் செய்து அவர்களுடைய டிஜிட்டல் அக்கவுண்டுகள் மற்றும் பணத்தை பல்வேறு வழிகளை பயன்படுத்தி திருடுகின்றனர். எனினும் இந்த மாதிரியான ஆன்லைன் மோசடியில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் புதுப்புது கருவிகளை கூகுள் அவ்வப்போது வெளியிடுகிறது.

Advertisement

யூசர்கள் தங்களை ஆன்லைன் மோசடிக்காரர்கள் மற்றும் மோசடிகளில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு சமீபத்தில் கூகுள் நிறுவனம் ஒரு சில முக்கியமான விஷயங்களை பகிர்ந்து கொண்டது. அதனை விளக்கமாக இந்த பதிவில் பார்க்கலாம். முதலாவதாக பிரபலமான நபர்களின் வீடியோக்கள் மற்றும் ஆடியோக்களுக்கு யூசர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று கூகுள் பரிந்துரை செய்யப்படுகிறது. பார்ப்பதற்கு மற்றும் கேட்பதற்கு அவை உண்மையானவை போல இருந்தாலும் அது போலியான மற்றும் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் மூலமாக உருவாக்கப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. தேர்தல்களின்போதும் முதலீடுகள் சம்பந்தமான மோசடிகளுக்கும் மோசடிக்காரர்கள் இதனை பயன்படுத்திக் கொள்கின்றனர்.

வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களில் உள்ள கண்டன்ட்டில் வழக்கத்திற்கு மாறான விஷயங்கள் ஏதேனும் இருக்கிறதா? என்பதை யூசர்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும். இரண்டாவதாக அதிக அளவு ரிட்டன் தருவதாக சொல்லி கிரிப்டோவில் முதலீடு செய்யும்படி வரும் இமெயில் அல்லது மெசேஜை ஒருவர் நம்பி விடக்கூடாது. இது முதலீடு சம்பந்தப்பட்ட மோசடியாக இருப்பதற்கான வாய்ப்பு ஏராளம். ஒரு குறுகிய காலத்தில் பணத்தை பல மடங்காக திருப்பி செலுத்துவதாக சொல்லும் முதலீட்டு திட்டங்கள் பெரும்பாலும் நியாயமானவையாக இருக்காது.

இதையும் படிங்க : ஜியோவில் ஸ்பேம் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ்களை நிரந்தரமாக தடுக்க வேண்டுமா? அப்போ இத பண்ணுங்க…

Advertisement

அடுத்தபடியாக மோசடிக்காரர்கள் பெரும்பாலும் வங்கி அப்ளிகேஷன்கள் மற்றும் வெப்சைட்டுகளை பயன்படுத்தி தனிநபர் விவரங்களை திருடுவதற்கு முயற்சி செய்வார்கள். உண்மையான வங்கி அப்ளிகேஷன்கள் மற்றும் வெப்சைட்டுகளை போலவே இருக்கும் போலியான வெப்சைட்டுகளை அவர்கள் உருவாக்குவார்கள். எனவே இந்த மாதிரியான வெப்சைட் மற்றும் போர்ட்டல்களை நாம் பயன்படுத்தும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எப்போதும் நம்பகமான மூலங்களில் இருந்து மட்டுமே அப்ளிகேஷன்களை டவுன்லோட் செய்யவும். மேலும் URL-இல் பிழையாக உள்ள வார்த்தைகள், வழக்கத்திற்கு மாறான லோகோ, எமோஜி, எழுத்துக்கள் போன்றவற்றை கவனிக்கவும். இவை போலியான போர்ட்டல்களுக்கான அறிகுறிகள்.

கூகுளில் நீங்கள் ஒரு விஷயத்தை தேடும்போது அதற்கு பதிலாக மோசடிக்காரர்கள் வேறு ஒரு விஷயத்தை உங்களுக்கு டிஸ்ப்ளே செய்வார்கள். மேலும் அதில் உங்களுடைய விவரங்கள் அதாவது லாகின் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் போன்ற தகவல்களை உள்ளிடும் படி கேட்கப்படுவீர்கள். இது உங்களுடைய அக்கவுண்டுகளின் கட்டுப்பாட்டை பெறுவதற்கான ஒரு சதி. இதன் மூலமாக உங்கள் பணத்தை இழப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. எனவே எந்த ஒரு வெப்சைட்டுக்குள் நுழையும் பொழுது அதில் உள்ள URL ஐ கூர்ந்து கவனியுங்கள்.

பொதுவாக பிராண்டுகள் மிகப்பெரிய நிகழ்வுகளுக்காக தனியாக மைக்ரோ வெப் பேஜ்களை உருவாக்குவது வழக்கம். மோசடிக்காரர்கள் இதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்கின்றன. முக்கியமான விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் கான்செப்ட் போன்றவற்றுக்கான போலி வெப் பேஜ்களை உருவாக்கி அதில் பாஸ், டிக்கெட் போன்றவற்றை விற்பனை செய்து பணத்தை வசூல் செய்கின்றனர். மேலும் டொனேஷன்களையும் இதன் மூலமாக அவர்கள் வசூல் செய்கிறார்கள். எனவே நீங்கள் ஆன்லைனில் எதை வாங்குவதாக இருந்தாலும் அந்த வெப்சைட் சரியானதா என்பதை ஒரு முறைக்கு இருமுறை சோதித்துப் பார்ப்பது அவசியம்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன