விளையாட்டு
Mumbai Indians: பேட்டிங்கில் ரோகித் – சூர்ய குமார்… பவுலிங்கில் போல்ட் – பும்ரா… மும்பை இந்தியன்ஸ் அணியின் உத்தேச பிளேயிங் 11 இதுதான்..

Mumbai Indians: பேட்டிங்கில் ரோகித் – சூர்ய குமார்… பவுலிங்கில் போல்ட் – பும்ரா… மும்பை இந்தியன்ஸ் அணியின் உத்தேச பிளேயிங் 11 இதுதான்..
ஐபிஎல் அணிகளுக்கான ஏலம் கடந்த இரண்டு நாட்களாக சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் நடந்து முடிந்தது. மொத்தம் 577 வீரர்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில், ஐபிஎல் உரிமையாளர்கள் தங்கள் அணிகளுக்கு தேவையான வீரர்களை எடுத்துள்ளனர்.
ரூ.120 கோடி வரை மதிப்புள்ள வீரர்களை ஏலத்தில் எடுக்கலாம் என தெரிவிக்கப்பட்ட நிலையில், 5 முறை சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் அணி 23 வீரர்களை தங்கள் அணியில் எடுத்துள்ளது.
ஏற்கனவே ஜஸ்பிரித் பும்ரா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரோகித் சர்மா மற்றும் திலக் வர்மா ஆகிய வீரர்களை ரூ.75 கோடிக்கு தக்கவைக்கப்பட்ட பிறகு, ரூ.45 கோடியுடன் ஏலத்தில் பங்கேற்றது மும்பை இந்தியன்ஸ் அணி.
அந்த அணி அதிகபட்சமாக ஜஸ்பிரித் பும்ராவை ரூ.18 கோடிக்கு தக்கவைத்திருந்த நிலையில், ட்ரெண்ட் போல்ட்டை ரூ.12.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
இதையும் படிக்க:
மெகா ஏலத்திற்கு பின்னர் கொல்கத்தா அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள்..
மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள்:
ஹர்திக் பாண்டியா (கே), ஜஸ்பிரித் பும்ரா, சூர்யகுமார் யாதவ், ரோஹித் சர்மா, திலக் வர்மா, ட்ரெண்ட் போல்ட், நமன் திர், ராபின் மின்ஸ், கர்ன் ஷர்மா, ரிக்கல்டன், தீபக் சாஹர், கசன்ஃபர், வில் ஜாக்ஸ், அஸ்வனி குமார், மிட்செல் சான்ட்னர், ரீஸ் டாப்லி, கிருஷ்ணன் ஸ்ரீஜித், ராஜ் பாவா, சத்தியநாராயண ராஜு, பெவோன் ஜேக்கப்ஸ், அர்ஜுன் டெண்டுல்கர், லிசாட் வில்லியம்ஸ், விக்னேஷ் புத்தூர்
மும்பை இந்தியன்ஸ் அணியின் உத்தேச பிளேயிங் 11:
ரோஹித் சர்மா, ரியான் ரிக்கல்டன் (வி.கீ), திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், வில் ஜாக்ஸ், ஹர்திக் பாண்டியா (கே), நமன் திர், மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர், டிரெண்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா