இந்தியா
ஃபெஞ்சல் புயல் எதிரொலி: விமானங்களை ரத்து செய்து மூடப்படும் சென்னை விமான நிலையம்!

ஃபெஞ்சல் புயல் எதிரொலி: விமானங்களை ரத்து செய்து மூடப்படும் சென்னை விமான நிலையம்!
இந்நிலையில், ஃபெஞ்சல் புயல் காரணமாக, சென்னையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு முதல் தற்போது வரை மழை தொடர்ந்து பெய்து வருகிறது. அவ்வப்போது கனமழையும் பெய்வதால், பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. அத்துடன் பல இடங்களில் பலத்த காற்றும் வீசி வருகிறது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால், சென்னை விமான நிலையத்தை மழைநீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாக, விமான நிலைய ஓடுபாதையில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால், விமானங்களை இயக்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது. இதன் காரணமாக, சென்னையில் இன்று மட்டும் 55 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
மழை தொடர்வதால் நாளை அதிகாலை 4 மணி விமானங்கள் இயக்கப்படாது என்றும், அதுவரை சென்னை விமான நிலையம் மூடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயல் இன்று இரவுக்குள் கரையைக் கடக்கும் என்பதால், அப்போது பலத்த காற்று மற்றும் மழை பெய்யும். எனவே, நாளை அதிகாலை 4 மணி வரை விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.