சினிமா
ஆர்.ஜே. பாலாஜியின் பருப்பு வெந்ததா! சொர்க்கவாசல் படத்தின் முதல் நாள் வசூல்!

ஆர்.ஜே. பாலாஜியின் பருப்பு வெந்ததா! சொர்க்கவாசல் படத்தின் முதல் நாள் வசூல்!
நடிகர் ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள திரைப்படம் சொர்க்கவாசல். இது நேற்று திரையரங்கங்களில் ரிலீசானது. விமர்சனங்களும் ஓரளவு வந்தவண்ணம் உள்ளன. இந்நிலையில் முதல் நாள் வசூல் விபரம் வெளியாகியுள்ளது. எல்.கே.ஜி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான பாலாஜி. ஆரம்பத்தில் ஊடகவியலாளராகவும், தொகுப்பாளராகவும் ஆர்.ஜே பாலாஜி என்று அழைக்கபட்டுவருகிறார். இவர் நடித்த முதல் படமே மாபெரும் ஹிட். தொடர்ந்து மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் என ஹீரோவாக நடிப்பது மட்டுமின்றி, இந்த இரண்டு படங்களையும், சரவணன் என்பவருடன் இணைந்து இயக்கியிருந்தார்.அடுத்ததாக நடிகர் சூர்யாவின் 45வது திரைப்படத்தை இயக்கவுள்ளார். இதற்கான பூஜை சமீபத்தில் போடப்பட்டது. இந்நிலையில் காமெடி நடிகரான ஆர்.ஜே. பாலாஜி சொர்க்கவாசல் திரைப்படம் மூலம் தன்னால் குணச்சித்திர வேடத்தில் நடிக்க முடியும் என்பதனை நிரூபித்துள்ளார். இந்த நிலையில், இப்படம் உலகளவில் முதல் நாள் மட்டுமே ரூ. 80 லட்சத்திற்கும் மேல் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இன்னும் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.