உலகம்
இத்தாலியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் சாவு!

இத்தாலியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் சாவு!
தெற்கு இத்தாலியில் எரிவாயு வெடித்ததில் இரண்டு சிறு குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவத்தில் நேபிள்ஸுக்கு அருகிலுள்ள சவியானோ நகரில் இரண்டு மாடி வீடு ஒன்று இடிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை, சம்பவத்தில் இரு குழந்தைகள், பெண் மற்றும் வயதான பாட்டி என நால்வர் உயிரிழந்துள்ளதாகவும் இடிபாடுகளில் இருந்து தந்தையும் புதிதாகப் பிறந்த குழந்தையும் மீட்கப்பட்டு ஆபத்தான நிலையில் நேபிள்ஸில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதுடன் குழந்தையின் காயங்கள் ஆபத்தானவை இல்லையென்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், உயிரிழந் குழந்தைகளின் வயதை அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை எனவும் அவர்களுக்கு நான்கு மற்றும் ஆறு வயது இருக்கும் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
எவ்வாறாயினும், பெற்றோரும் மூன்று குழந்தைகளும் ஒரே மாடியில் வசித்ததாகவும், பாட்டி மேல் மாடியில் வசித்து வந்ததாகவும் கட்டிடம் இடிந்து விழுந்ததற்கான சரியான காரணம் குறித்து விசாரணைகள் தொடர்கின்றதாகவும் ஆரம்ப விசாரணையில் எரிவாயு வெடிப்பிற்குப் பிறகு வீடு இடிந்து விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது 60 க்கும் மேற்பட்ட சிவில் பாதுகாப்பு தன்னார்வலர்கள் மீட்பு முயற்சிகளில் இணைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (ச)