உலகம்
இந்தியாவில் இருந்து காஸாவுக்கு மனிதாபிமான உதவிகள்

இந்தியாவில் இருந்து காஸாவுக்கு மனிதாபிமான உதவிகள்
பலஸ்தீனின் காஸாவில் முன்னெடுக்கப்படும் யுத்தம் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கென 30 தொன் மனிதாபிமான உதவிப் பொருட்களை இந்தியா அனுப்பி வைத்துள்ளது.
இந்த உதவிப் பொருட்களில் அத்தியாவசிய மருந்துகள், சத்திர சிகிச்சைக்கான மருந்துகள், உபகரணங்கள், பல் வைத்தியத்திற்கான மருத்துவப் பொருட்கள், பொது மருத்துவ சிகிச்சைக்குரிய பொருட்கள்கள், கலோரி அதிகம் கொண்ட பிஸ்கட்டுகள் என்பன அடங்கியுள்ளன என்று இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். பலஸ்தீனத்துக்கான ஐ.நா.வின் நிவாரணப் பணிகள் முகவரகவத்தின் ஊடாக இந்த மனிதாபிமான உதவிப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காஸா மீது தொடராக முன்னெடுக்கப்பட்டுவரும் தாக்குதல்கள் காரணமாக அங்குள்ள மக்கள் போதிய உணவு, குடிநீர், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்கப் பெறாமல் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்ததே.