Connect with us

உலகம்

இஸ்ரேலிக் தாக்குதலில் பல கட்டிடங்கள் தகர்ப்பு!

Published

on

Loading

இஸ்ரேலிக் தாக்குதலில் பல கட்டிடங்கள் தகர்ப்பு!

லெபனான் தலைநகரில்   ஹெஸ்புல்லா அமைப்பு பயன்படுத்தும் வங்கிககளை இலக்குவைத்து இஸ்ரேல் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. பெய்ரூட்டின் தெற்குபுறநகரில் உள்ள அல் ஹார்ட் அல் ஹசன் வங்கியின் கிளைகளை இஸ்ரேல் தாக்கியுள்ளது . பெய்ரூட்டின் சர்வதேச விமானநிலையத்திற்கு அருகில் உள்ள வங்கி கிளைகளையும் இஸ்ரேல் தாக்கியுள்ளது.

விமானநிலையத்திற்கு அருகில் உள்ள கட்டிடமொன்றை இஸ்ரேலின் விமானங்கள் தாக்குவதையும் அந்த கட்டிடம் இடிந்து விழுவதையும் காண்பிக்கும் காணொளிகள் வெளியாகியுள்ளன. பெய்ரூட்டின் தென்பகுதியில்  பொதுமக்கள் அதிகமாக வசிக்கும் பகுதியில் அல் ஹார்ட் அல் ஹசன் என்ற பெயர்பலகையுடன் காணப்படும் கட்டிடம் தீப்பிடித்து எரிவதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

அல் ஹார்ட் அல் ஹசன் வங்கி அமைந்துள்ள பகுதியில் காணப்படும் ஏனைய கட்டிடங்களில் இருந்து பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனர்இஅந்த பகுதியில் உள்ள மருத்துவமனையின் நோயாளிகள் பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. (ஞ)

 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன