உலகம்
இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் அல்ஜசீராவின் ஊடகவியலாளர்கள் இருவர் சாவு!

இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் அல்ஜசீராவின் ஊடகவியலாளர்கள் இருவர் சாவு!
காசாவில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் அல்ஜசீராவின் இரு ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
அல்ஜசீராவின் பத்திரிகையாளர் இஸ்மாயில் அல் கௌலும், கமரா ஊடகவியலாளர் ரமி அல் ரைவும் கொல்லப்பட்டுள்ளனர் என அல்ஜசீரா ஊடகம் செய்தி தெரிவித்துள்ளது.
மேற்குகாசாவின் சட்டி அகதிமுகாம் பகுதியில் இவர்கள் பயணித்துக்கொண்டிருந்த காரின் மீது தாக்குதல் இடம்பெற்றது என தெரிவிக்கப்பட்டுள்ள அதேநேரம் இஸ்ரேலினால் படுகொலை செய்யப்பட்ட ஹமாசின் தலைவர் இஸ்மாயில் ஹனியேயின் வீட்டிற்கு அருகிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.