உலகம்
ஈரான் பாதுகாப்பு பட்ஜெட்டை 200 வீதமாக அதிகரிக்க திட்டம்!

ஈரான் பாதுகாப்பு பட்ஜெட்டை 200 வீதமாக அதிகரிக்க திட்டம்!
ஈரான் தனது பாதுகாப்பு படைகளுக்கான வரவு செலவுத்திட்டத்தை 200 சதவீதமாக அதிகரிப்பதற்கு திட்டமிட்டுள்ளது. காஸா மற்றும் லெபனான் மீது தொடராக இஸ்ரேல் இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்ற அதேநேரம் கடந்த 26 ஆம் திகதி ஈரான் மீதும் இஸ்ரேல் தாக்குதல்களை முன்னெடுத்தது. தெஹ்ரான், இலம், குஸெசஸ்தான் ஆகிய இடங்களிலுள்ள சுமார் 20 தளங்கள் மீது இத்தாக்குதல்கள் நடாத்தப்பட்டதோடு நான்கு படைவீரர்களும் கொல்லப்பட்டனர்.
இவ்வாறான பின்புலத்தில் ஈரானின் பாதுகாப்பு படைகளுக்கான வரவு செலவுத்திட்ட ஒதுக்கத்தை மும்மடங்காக அதிகரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த வரவு செலவுத்திட்ட அதிகரிப்பு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்படும் என்று அரசாங்க பேச்சாளர் ஃபதேமே மொஹஜெரானி நேற்றுத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2023 இல் ஈரானின் பாதுகாப்பு செலவு சுமார் 10.3 பில்லியன் டொலர்களாகக் காணப்பட்டது. [எ]