உலகம்
எல் கெசிரா மாநிலத்தில் 124 பேர் கொலை

எல் கெசிரா மாநிலத்தில் 124 பேர் கொலை
சூடானின் துணை இராணுவ ஆதரவுப் படைகள், எல் கெசிரா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் குறைந்தது 124 பேரைக் கொலை செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது அந்த நாட்டில் இடம்பெற்று வரும் 18 மாத காலப் போரின் மிகக் கொடிய சம்பவங்களில் ஒன்றாகும் என்று கருதப்படுவதுடன் இம்மாநிலத்தில் நடந்த தாக்குதல்களில் மிகப்பெரியது என்றும் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
உயர் பதவியில் இருந்த அபகல்லா கேய்கள் என்ற துணை இராணுவ அதிகாரி ஒருவர், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நாட்டின் இராணுவத்திடம் சரணடைந்ததைத் தொடர்ந்து, சரணடைந்த அதிகாரி வசித்து வந்த விவசாய கிராமத்தின் மீது இந்த பழிவாங்கும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே சூடானில் இடம்பெற்று வரும் போரால் 11 மில்லியனுக்கும் அதிகமான மக்களை இடம்பெயர்ந்துள்ளதுடன், நாட்டின் சில பகுதிகளை கடுமையான பசி அல்லது பஞ்சத்துக்கும் தள்ளியுள்ளது.
2021 இல் நாட்டில் இடம்பெற்ற ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னர் அங்கு உள்நாட்டு யுத்தம் ஆரம்பமானமை குறிப்பிடத்தக்கது.