உலகம்
ஐ.நா.வில் இஸ்ரேல் மீது ஈராக் புகார்

ஐ.நா.வில் இஸ்ரேல் மீது ஈராக் புகார்
ஐ.நா. பொதுச் செயலாளர் மற்றும் ஐ.நா. பாது காப்பு அவையில் இஸ்ரேல் மீது இராக் புகார் கொடுத்துள்ளது. இப்புகாரில் தனது நாட்டின் வான்வெளியை அனுமதி இன்றி ஈரான் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் பயன்படுத்தியதாக தெரிவித்துள்ளது.
இது இராக் நாட்டின் இறையாண்மையை அப்பட்டமாக அத்துமீறும் செயல் எனவும் கண்டித் துள்ளது. இராக் அரசு செய்தித் தொடர்பாளர் பாசிம் அல்-அவாதி திங்க ளன்று இந்த புகார் குறித்தான தகவலை உறுதி செய்துள்ளார்.
மேலும் பிராந்தியத்தில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தையே இராக் விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.