Connect with us

சினிமா

சமந்தா குடும்ப பெண் இல்லையா.? நாகசைதன்யா பதிலுக்கு நெட்டிசன்கள் ஆவேசம்

Published

on

Loading

சமந்தா குடும்ப பெண் இல்லையா.? நாகசைதன்யா பதிலுக்கு நெட்டிசன்கள் ஆவேசம்

நாகசைதன்யா சோபிதா துளிபலா திருமணம் சீக்கிரமே நடைபெற உள்ளது. இவர்கள் திருமணத்துக்கு வாழ்த்துக்களை விட வசைபாடல் தான் அதிகமாக உள்ளது. இருப்பினும், எதையும் கண்டுகொள்ளாமல், தங்கள் திருமண வேலைகளை மட்டும் கவனித்து வருகின்றனர் குடும்பத்தினர்.

முதலில் நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்த நாகசைதன்யா சில மனக்கசப்புகள் காரணமாக பிரிய முடிவெடுத்தார். அதன் பின்னர், இந்த வலியில் இருந்து, சமந்தா வெளிவர மிகவும் சிரமப்பட்டார். depression உச்சத்துக்கே சென்றுவிட்டார். தொடர்ந்து தனது கேரியரில் கவனம் செலுத்தவும் முடிவு செய்தார்

Advertisement

இந்த நிலையில், நாகசைதன்யா சோபிதா பற்றி அடிக்கடி வதந்திகள் பரவி வந்தது.. அது எதுவும் வதந்திகள் அல்ல, உண்மை தான் என்பதை நிரூபிக்கும் போல சமீபத்தில் திருமண அறிவிப்பை வெளியிட்டார் நாகர்ஜுனா. இதை தொடர்ந்து சமந்தா ரசிகர்கள் பலர் இதை மோசமாக விமர்சித்து வந்தனர்.

இந்த நிலையில், சமீபத்தில் நடந்த ஒரு ஜூம் நேர்காணல் ஒன்றில், சோபிதா பற்றிய பல தகவல்களை பகிர்ந்திருந்தார், நாகசைதன்யா. அதில், “சோபிதா ஒரு குடும்ப பெண். எங்கள் குடும்பங்கள் ஒன்றாக இருப்பதை பார்ப்பதற்கு அழகாக உள்ளது.

மேலும் பாரம்பரியத்தை பொறுத்த அளவில், இருவரின் பாரம்பரியமும் ஒரே மாதிரி உள்ளது. அதனால் தான் திருமணம் செய்ய முடிவு எடுத்தோம்.” என்று குறிப்பிட்டுள்ளார். இது சமந்தா ரசிகர்கள் மத்தியில் மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

“சமந்தா குடும்பத்தில் இருந்து வந்த பெண் இல்லையா? அவர் உங்கள் குடும்பத்துக்கு ஏற்ற பெண் இல்லை என்றால், ஏன் திருமணம் செய்தீர்கள்? ஆரம்பத்திலே, தெளிவாக பேசி பிரிந்து இருக்கலாமே..” என்று கமெண்ட் செய்து வருகின்றனர்

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன