சினிமா
சர்வதேச பார்வையாளர்களுக்கான விருந்து.. தக் லைஃப் படத்திற்கு கிடைத்த முதல் விமர்சனம்

சர்வதேச பார்வையாளர்களுக்கான விருந்து.. தக் லைஃப் படத்திற்கு கிடைத்த முதல் விமர்சனம்
கூட்டணியில் உருவாகி வரும் அடுத்த ஆண்டு ஜூன் 5ஆம் தேதி வெளிவர இருக்கிறது. இதில் என பல நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர்.
சமீபத்தில் கமல் பிறந்த நாளில் வெளிவந்த வீடியோ வேற லெவலில் ட்ரெண்டானது. அதிலும் விண்வெளி நாயகன் என வந்த வசனத்தை பார்த்ததும் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் அதை கொண்டாடினார்கள்.
இந்நிலையில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பாலிவுட் பிரபலம் படம் பற்றிய தன்னுடைய முதல் விமர்சனத்தை கொடுத்துள்ளார். ஹிந்தி மட்டுமல்லாது ஹாலிவுட்டிலும் கலக்கி கொண்டிருக்கும் இவர் நடிக்கும் முதல் தமிழ் படம் இதுதான்.
அது குறித்து பெருமையாக பேசிய அவர் மணிரத்னம் கமலுடன் இணைந்து பணியாற்றியது புது அனுபவமாக இருந்தது. பல விஷயங்களை நான் கற்றுக் கொண்டேன். அதை என் வாழ்வில் மறக்கவே முடியாது.
மேலும் இப்படம் ஒரு நல்ல நடிகனாக என்னை முன்னேற்றி இருக்கிறது. இந்திய ரசிகர்களை தாண்டி சர்வதேச அளவில் இப்படம் ஒரு சினிமா விருந்தாக இருக்கும் என அவர் மனம் திறந்து பேசியுள்ளார்.
இது வைரலாகி வரும் நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. ஆனால் கங்குவா மாதிரி இது ஓவர் டோஸ் ஆகிவிடக்கூடாது என்ற கவலையும் ரசிகர்களுக்கு ஒரு பக்கம் இருக்கிறது. அதனால் படம் வெளிவரும் வரை நடிகர்கள் கொஞ்சம் அடக்கி வாசித்தால் நன்று.