Connect with us

வணிகம்

சிபில் ஸ்கோர் இல்லாமல் லோன் வாங்க வேண்டுமா… அப்போ இத கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!

Published

on

சிபில் ஸ்கோர் இல்லாமல் லோன் வாங்க வேண்டுமா... அப்போ இத கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!

Loading

சிபில் ஸ்கோர் இல்லாமல் லோன் வாங்க வேண்டுமா… அப்போ இத கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!

Advertisement

ஒரே நேரத்தில் பல லோன்களை பெறும் செயல்முறையை மிகவும் சௌகரியமாக மாற்றுவதற்கு இன்ஸ்டன்ட் லோன் அப்ளிகேஷன்கள் பெரிய அளவில் உதவி வருகின்றன. உங்களுக்கு ஏற்ற பர்சனல் லோன் வாங்குவதற்கு இன்ஸ்டன்ட் லோன் அப்ளிகேஷன்கள் மூலமாக நீங்கள் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு ஆன்லைன் பிளாட்ஃபார்ம் மூலமாக லோன்கள் வழங்குபவர்கள் உங்களுக்கு கடன் வழங்குவதற்கு கிரெடிட் ஸ்கோர் மற்றும் உங்களின் வருமானத்தை கணக்கில் எடுத்துக் கொண்டு உங்களுக்கான கடனை அங்கீகரிப்பார்கள். எனவே இன்ஸ்டன்ட் லோன் வாங்குவதற்கு கிரெடிட் ஸ்கோர் அல்லது சிபில் ஸ்கோர் என்பது மிகவும் முக்கியம்.

ஒரு நல்ல கிரெடிட் ஸ்கோர் என்பது நீங்கள் எந்த பேமெண்டையும் பெண்டிங் வைக்காத நல்ல கடன் பெறுபவர் என்பதை குறிக்கிறது. ஆனால் ஒருவேளை நீங்கள் புதிதாக கடன் வாங்குபவர் என்றாலோ அல்லது உங்களுடைய சிபில் ஸ்கோரை ஆன்லைனில் சரி பார்க்க முடியாவிட்டாலோ என்ன ஆகும்? சிபில் ஸ்கோர் இல்லாவிட்டாலும் கூட உங்களுக்கு இன்ஸ்டன்ட் லோன் கிடைக்குமா? எனவே இந்த பதிவில் சிபில் ஸ்கோர் அல்லது கிரெடிட் ஸ்கோர் இல்லாமல் இன்ஸ்டன்ட் லோன் வாங்குவதற்கான வழிகள் குறித்து தெரிந்துகொள்ளலாம்.

Advertisement

சிபில் ஸ்கோர் என்பது வாங்கும் கடனை நீங்கள் சரியான முறையில் திருப்பி செலுத்துவீர்களா என்பதை மதிப்பிட உதவும் ஒரு 3 இலக்க நம்பர். இது பொதுவாக 300 முதல் 900 வரை இருக்கும். சிபில் ஸ்கோர் என்பது ட்ரான்ஸ் யூனியன் சிபில் மூலமாக வழங்கப்படுகிறது.

நாம் ஏற்கனவே கூறியது போல ஒரு சிபில் ஸ்கோர் என்பது ஒரு கடனை நீங்கள் ஒழுங்காக திருப்பி செலுத்துவீர்கள் என்பதை மதிப்பீடு செய்ய உதவுகிறது. ஒரு நல்ல சிபில் ஸ்கோர் 700க்கும் அதிகமாக இருக்கும். இப்படி இருந்தால் உங்களுக்கு எளிதாக கடன் கிடைத்து விடும். 700 முதல் 900 வரை சிபில் ஸ்கோர் இருப்பது நல்ல ஸ்கோராக கருதப்படுகிறது.

Advertisement

உங்களிடம் நல்ல சிபில் ஸ்கோர் இருந்தால் உங்களுடைய லோன் அப்ளிகேஷன்கள் குறைவான வட்டி விகிதங்களோடு உடனடியாக அங்கீகரிக்கப்படும்.

அதிக சிபில் ஸ்கோர் உங்களுக்கு இன்ஸ்டன்ட் லோன்களை உடனடியாக அப்ரூவல் செய்வதற்கு உதவுகிறது.

Advertisement

அதிகமான கிரிடிட் ஸ்கோர் வைத்திருப்பவர்களுக்கு குறைவான வட்டி விகிதங்களில் இன்ஸ்டன்ட் லோன் கிடைக்கும்.

நல்ல கிரெடிட் ஸ்கோர் வைத்திருக்கும் கடன் பெறுபவர்களுக்கு அதிக அளவிலான தொகையை கடனாக கொடுப்பதற்கு கடன் வழங்குனர்கள் தயங்க மாட்டார்கள்.

மேலும் அதிக சிபில் ஸ்கோர் இருப்பது முன்கூட்டியே அப்ரூவ் செய்யப்பட்ட லோன்களுக்கான அணுகலை உங்களுக்கு வழங்கும்.

Advertisement

உங்களிடம் சிபில் ஸ்கோர் இல்லாவிட்டால் நீங்கள் புதிதாக கடன் வாங்குகிறீர்கள் என்று அர்த்தம். இதற்காக நீங்கள் வருத்தப்பட தேவையில்லை நீங்கள் ஒரு சிறிய தொகை கடன் தொகை மூலமாக ஆரம்பிக்கலாம். ஒருவேளை உங்களுக்கு இன்ஸ்டன்ட் லோன் வேண்டுமென்றால் உங்களுடைய வருமானத்தை ஒப்பிட்டு முதலில் ஒரு சிறிய தொகைக்கு விண்ணப்பியுங்கள். ஒருவேளை நீங்கள் இதற்கான EMI-களை சரியாக செலுத்துவீர்கள் என்று வங்கி நினைத்தால் உங்களுக்கான லோன் அப்ரூவ் செய்யப்படும்.

Advertisement

உங்களுடைய வருமானத்திற்கான சான்றிதழ்களை வழங்குவது இன்ஸ்டன்ட் லோன் அங்கீகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். எனவே பர்சனல் லோனுக்கு விண்ணப்பிக்கும் பொழுது விண்ணப்ப படிவத்தோடு உங்களுடைய வருமான சான்றிதழையும் இணைக்க மறக்காதீர்கள். ஒருவேளை நீங்கள் சுய தொழில் செய்து வருபவர் என்றால் உங்களுடைய தொழில் தொடர்பானசெயல்பாடுகள் சம்பந்தப்பட்ட டாகுமெண்ட்களை வழங்கலாம்.

பொதுவாக குறைவான கிரெடிட் வைத்திருப்பவர்கள் இன்ஸ்டன்ட்ல உங்களுக்கு விண்ணப்பிப்பதில் சிரமத்தை அனுபவிப்பார்கள் கடந்த 36 மாதங்களுக்கு உங்களுடைய கிரெடிட் ரிப்போர்ட்டில் எந்த ஒரு வரலாறும் இல்லாவிட்டால் உங்களுடைய ரிப்போர்ட்டில் NH அல்லது NA போன்ற எழுத்துக்கள் இருப்பதை நீங்கள் கவனிக்கலாம். NA என்பது “நோ ஹிஸ்ட்ரி அவெய்லபிள்” அதாவது எந்த ஒரு வரலாறும் இல்லை என்று அர்த்தம். இதுவே NH என்பது “நோ ஹிஸ்டரி”.

ஒரு நல்ல கிரெடிட் ஸ்கோர் கொண்ட நபருடன் சேர்ந்து நீங்கள் ஒரு லோனுக்கு விண்ணப்பிப்பது அடுத்த ஆப்ஷனாக இருக்கும். இவ்வாறு நீங்கள் செய்தால் உங்களுடைய லோன் அப்ளிகேஷன் அங்கீகரிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.

Advertisement

நல்ல சிபில் ஸ்கோர் வைத்திருப்பது முக்கியம் தான் என்றாலும் கூட உங்களுடன் கடன் பயணத்தை ஆரம்பிப்பதற்கு கடன் வழங்குநர்கள் ஏதாவது ஒரு வழியை நிச்சயமாக வைத்திருப்பார்கள். அது என்ன என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் அதனை பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம். எனவே சிபில் ஸ்கோர் இல்லாவிட்டாலும் கூட உங்களால் இன்ஸ்டன்ட் லோனுக்கான அங்கீகாரத்தை பெற முடியும். எனவே உங்களுடைய வருமானத்திற்கான ஒரு சான்றிதழை வழங்குவதன் மூலமாக உடனடி லோன்களை நீங்கள் பெறலாம்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன