Connect with us

சினிமா

சீனாவை அதிரவைக்கும் மகாராஜா!

Published

on

Loading

சீனாவை அதிரவைக்கும் மகாராஜா!

வெற்றி படம் என்றால் இப்படி இருக்கணும் என்கிற வகையில், மகாராஜா படம் பெரிய உதாரணமாக அமைந்துள்ளது. ஏற்கனவே, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாகி வசூலிலும், விமர்சன ரீதியாகவும் பெரிய அளவில் பாராட்டுகளை பெற்றது. வசூல் ரீதியாக படம் 100 கோடி வசூல் செய்து விஜய் சேதுபதிக்கு முதல் 100 கோடி கொடுத்த படம் என்ற சாதனையையும் படைத்தது.

தமிழில் இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்ற காரணத்தால் படத்தை சீனாவிலும் வெளியிடலாம் அங்கும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பதால் அங்கேயும் படம் நாளை பெரிய பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 40,000 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. வெளியீட்டிற்கு முன்பே சீனாவில் படம் வசூலில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

முன்னோட்டத் திரையிடல்கள் மூலம் மட்டும் படம் $500,000 வசூலித்துள்ளது. அதாவது இந்திய மதிப்பின் படி 4 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  சீன யுவானைப் பொறுத்தவரை, படம் இதுவரை ¥36,23,149 சம்பாதித்துள்ளது.

இதற்கு முன்னதாக,  பாகுபலி 2 சீனாவில் அதன் முழு வாழ்நாளில் ¥76,840,000 சம்பாதித்தது. இது தான் அதிகம் வசூல் செய்த படமாகவும் உள்ளது. ஆனால், மகாராஜா படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்புகள் உள்ள காரணத்தால் கண்டிப்பாக வெளியான பிறகு இன்னுமே வசூல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. 20 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் ஏற்கனவே, தமிழகத்தில் வெளியான போது 105 கோடி வரை வசூல் செய்து லாபத்தை கொடுத்த நிலையில், சீனாவிலும் லாபத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன